மாணவர்களின் கல்வி ஆவணங்களில் அரசு அதிகாரிகளிடம் சான்றொப்பம்பெறும் முறையை கைவிட்டு, மாணவர்களின் சுய சான்றளிப்பு ஆவண நகல்களைப்பெறுமாறு அனைத்து பல்கலைகளுக்கும் யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
மதிப்பெண் பட்டியல், பிறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்டவற்றில் சான்றொப்பம் வழங்கும் அதிகாரிகளின் கையொப்பம் பெறுவதில் பல்வேறு சிரமங்களை மாணவர்கள் அனுபவிக்கின்றனர். நகர்ப்புற மாணவர்களை காட்டிலும், கிராமப்புற மாணவர்களுக்கு இது கூடுதல் சிரமத்தை அளிக்கிறது.
எனவே, மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு அனைத்து பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களுக்கும்யு.ஜி.சி., சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மாணவர்களின்கல்வி ஆவணங்களில் அரசு அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெறும் முறையை கைவிட்டு, மாறாக, மாணவர்களின் சுய சான்றளிப்பு ஆவண நகல்களைப் பெற்றுக்கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், சேர்க்கைக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கும் பெரும் பயனளிக்கக் கூடியதாக அமைந்துள்ளது. மேலும், ஒரு வாரத்திற்குள் இதை அமல்படுத்த அவசர நடவடிக்கைகள் எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர, இந்த உத்தரவை அமல்படுத்தியதை உறுதிப்படுத்தும் வகையில் அறிக்கை அனுப்பி வைக்குமாறும், பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி