அரசு பள்ளியில் உதவியாளர் பணி பதிவு தகுதி சரி பார்க்க அழைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 12, 2014

அரசு பள்ளியில் உதவியாளர் பணி பதிவு தகுதி சரி பார்க்க அழைப்பு.


அரசு பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பணிக்கான பரிந்துரை பட்டியலைதகுதியுள்ள பதிவுதாரர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்,' என, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:

தஞ்சாவூர் மாவட்ட அரசு பள்ளிகளில் புதிதாக அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்ச்சி. வயது வரம்பு, 1.7.2014 நிலையில்முற்பட்ட வகுப்பினருக்கு, 30 வயதும், பி.சி., எம்.பி.சி., பிரிவினருக்கு, 32 வயதும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு, 35வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கல்வித்தகுதியாக மேல்நிலைக்கல்வி, மூன்று ஆண்டு பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்த ஓ.சி., பிரிவினரைத் தவிர்த்து, இதர பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான உத்தேச பரிந்துரை பட்டியல் மற்றும் பதிவு மூப்பு விவரங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. பரிந்துரைப் பட்டியலில் ஆதரவற்ற விதவைப் பிரிவைச் சேர்ந்த அனைத்து பதிவுதாரர்களும் முன்னுரிமை அற்ற பிரிவில், எஸ்.சி.ஏ., 3.2.1993, எஸ்.சி., 3.8.1984, பி.சி.எம்., 6.6.1991, எம்.பி.சி., 22.6.1988, பி.சி.,11.7.1984, ஓ.சி.,19.5.1986 தேதி வரை பதிவுசெய்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தகுதியுடையவர்கள் வரும், 15ம் தேதிக்கு முன் பரிந்துரைப் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். பட்டியல் விடுபாடு திருத்தம்வேண்டுவோர், 15ம் தேதிக்கு முன், உரிய ஆவணங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. அன்பார்ந்த Whatsapp நண்பர்களுக்கு
    சமீபகாலமாக நாம் உபயோகிக்கும் மொபைல் Network- ன் net Pack ஒரு காலத்தில் ரூ. 68 க்கு 1GB 30 நாட்கள் கிடைத்தது, பின்பு ரூ.80 க்கு விலையை உயர்த்தி MBயை 900 MB யாக குறைக்கப்பட்டது இதுவும் 30 நாட்ளுக்கு ரீச்சார்ஜின் விலை நாளுக்கு நாள் கம்பெனியாளர்கள் உயர்த்தி இன்றைய விலை ரூ.128 க்கு 1GB-2G 28 நாட்களாக, பின்பு இன்னும் காலாவரி நாட்கள் குறைக்கப்பட்டது, ரூ.128 க்கு கிடைத்த 3G 30நாள் netpack ரூ.198 க்கு 1GB- 3G -28 நாட்கள் இப்படியாக கம்பெனிகாரர்கள் விலையை மாற்றிக்கொண்டே இருக்கக் காரணம் இன்டர்நெட் Internet நம்முடைய அன்றாட தேவையாக இருப்பதால்தான், இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் Smart Phone ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறோம் ஆகவே ஸிம் கம்பெனி நெட் பேக் மூலமாக தனது வருமானத்தை பெருக்கிக்கொண்டது. இவர்களுக்கு தெரியும் நாம் ஒரு போதும் இதை எதிர்த்து குரல் எழுப்ப மாட்டோம் என்று. ஆனால் அது உண்மையல்ல நாம் இந்தியர் அனைவரும்
    ஒன்றாக சேர்ந்து எதிர்ப்போம், வரும் 31 OCT 31 அக்டோபர் அன்று MOBILE DATA CONNECTION. DISABLE மொபைல் டேட்டா OFF செய்து எதிர்ப்பை வெளியிடுவோம், 31 அக்டோபர் அன்று கர்நாடகம், ஆந்திரம், கேரளம், மஹா ராஷ்ட்ரா, ராஜஸ்தான்,குஜராத், பஞ்சாப், ஒரிஸா, மேற்கு வங்கம், உத்திரப் பிரதேசம் என அனைத்து மாநிலங்கலிலும் இந்தச் செய்தி மொழிபெயர்ப்புடன் அனுப்ப பட்டுள்ளது, ஆகவே 31oct internet உபயோகிக்க வேண்டாம், இந்தத் தகவலை எல்லோருக்கும் FARWARD செய்யவும். வெளி நாடுகளில் இதே போலதான் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர், நமக்கென்ன போனது என்று இந்த தகவலை
    Ignore (நிறாகரிப்பு) செய்ய வேண்டாம், நாம் நம் ஒற்றுமையை வெளிகாட்ட எத்தனையோ முறை முயர்ச்சித்திருக்கிறோம் ஆனால் இம்முறை ஒற்றுமை காண்போம், காட்டுவோம். Please farward to all ur whatsapp contacts

    ReplyDelete
  2. pls tell sivagangai dist employment seniority for school lab asst

    ReplyDelete
  3. sivagangai layum ithe nilamai than

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி