இனி டோல்கேட்டில் நிற்க வேண்டியதில்லை... வந்துவிட்டது வாஹன்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2014

இனி டோல்கேட்டில் நிற்க வேண்டியதில்லை... வந்துவிட்டது வாஹன்!

கார்களில் நெடுஞ்சாலைப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி; ஒரு சோகமான செய்தி!
நல்ல செய்தி: நீண்ட தூரப் பயணத்தின்போது டோல்கேட்களில் டயர் கடுக்கக் காத்திருந்துவிட்டு, ‘‘சில்லறை இல்லங்க!’’ என்று இனி நீங்கள் டோல் ஊழியர்களிடம் பிரச்னை செய்ய வேண்டியதில்லை.

சோகமான செய்தி: ஆனால், இந்த நடைமுறை இப்போது நம் ஊர் நெடுஞ்சாலைகளில் இன்னும் அமலுக்கு வரவில்லை. மும்பையிலிருந்து டெல்லிக்கோ அல்லது டெல்லியில் இருந்து மும்பைக்கோ நீங்கள் பயணம் செய்தீர்கள் என்றால், இதை நீங்கள் அனுபவிக்கலாம்.




இதற்கு உங்கள் கார்களில் - RFID என்னும் Radio Frequency Identification Tag என்னும் ஸ்மார்ட் டேக் இருக்க வேண்டும்.

ETC எனும் இந்த எலெக்ட்ரானிக் டோல் சிஸ்டத்தை சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, அக்டோபர் 31 முதல் டெல்லி - மும்பை சாலைகளுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறார். 55 டோல் ப்ளாஸாக்களில் ஏற்கெனவே இதை நடைமுறைக்குக் கொண்டு வந்து, டெஸ்ட்டும் செய்யப்பட்டு விட்டதாகவும் சொன்னார் நிதின் கட்கரி.

எலெக்ட்ரானிக் டோல் மூலம் பணம் செலுத்தும் கார்களுக்கென்று, டோல்களில் தனி லேன் அமைக்கவும் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு. இதன் மூலம் டோல்கேட்டில் தேவையில்லாமல் காத்திருக்கத் தேவையில்லை; பயணமும் ஈஸியாக அமையும்.

இந்த ‘ஸ்மார்ட் டேக்’ மூலம் உங்கள் கார் ரிஜிஸ்ட்ரேஷன் முதல் உங்கள் முகவரி, இன்ஷூரன்ஸ், ரோடு டாக்ஸ் வரை அனைத்தும் டேட்டா பேஸில் டிஸ்ப்ளே ஆகும். ஆனால், இவற்றை டோல் மற்றும் டிரான்ஸ்போர்ட் அதிகாரிகள் மட்டுமே கண்காணிக்க முடியும். 2016 இறுதிக்குள் கார் உரிமையாளர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு மாதிரி இந்த 'ETC' ஸ்மார்ட் டேக் வழங்கப்பட இருக்கிறது. இதற்கு ‘வாஹன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறது அரசு. விரைவில் நம்மூருக்கும் வரவிருக்கிறது வாஹன்.

வாஹன் திட்டம், ‘ஆதார்’ மாதிரி ஆதரவற்றுப் போகாமல் இருந்தால் நல்லது!

5 comments:

  1. yaaraga irunthalum ungalukku tet job kelungal adhu ungal urimai,aduthavargalai patri vimarsanam vendam,90 kku 1 mark kurainthavar yellam muttal illai,90 mark eduthavarellam unaravendiya oru vishayam,naan tet paper 2 vil 101 mark.select paper2 tet and pg trb,yenakku theriyatha seithi 20 mark eduthavarukku kooda theritum,avarukku theriyatha seithi yenakkum theriyum

    ReplyDelete
  2. M..ed ent cut off mark in bharathiar university ?

    ReplyDelete
  3. hai dear brothers & sisters and my friends gooooooooddduuuuu morning

    ReplyDelete
    Replies
    1. Good Morning Friend.... Have a Thrilling Thursday....

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி