"டிஸ்லெக்சியா' நோய் கண்டறியமருத்துவ பரிசோதனை அவசியம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 4, 2014

"டிஸ்லெக்சியா' நோய் கண்டறியமருத்துவ பரிசோதனை அவசியம்.


கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிய, பள்ளிதோறும் மருத்துவபரிசோதனை நடத்த, கல்வித்துறை முன்வர வேண்டும்.
நரம்பில் கோளாறு ஏற்பட்டு, மூளையின் ஒரு பகுதி செயல்பாட்டை இழப்பது, "டிஸ்லெக்சியா' நோய் எனப்படுகிறது.

இந்நோயால் பாதித்த குழந்தைகளுக்கு, கற்றல் குறைபாடு ஏற்படும். புத்தகத்தில் உள்ள எழுத்துகளை சேர்த்து படிப்பதிலும், எழுத்து வரிசைகளை பார்ப்பதிலும் பிரச்னை உண்டாகும். மற்ற குழந்தைகளைபோல், அவர்களால் எளிதாக படிக்க முடியாது.இப்பாதிப்புள்ள குழந்தைகளுக்கு தனிப்பயிற்சி அளிப்பதோடு, சிறப்பு சலுகையாக, அவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும்போது, கூடுதலாக 30 நிமிடம் வரை அவகாசம் தரப்படுகிறது. தேர்வை அவர்களே எழுதாமல், இளநிலை ஆசிரியர் மூலமாக எழுதவும், தேர்வுத்துறை அனுமதிக்கிறது.பள்ளி குழந்தைகளில் "டிஸ்லெக்சியா' நோய் பாதித்தவர்களை எளிதாக அறியமுடியாது; மற்ற நடவடிக்கைகளில், இக்குழந்தைகளிடம் எவ்வித மாற்றமும் இருக்காது. பிற குழந்தைகளை போலவே தோற்றத்திலும், செயல்களிலும் காணப்படுவர்; தங்களது திறன்களையும் வெளிப்படுத்துவர். ஆனால், படிக்கும்போது மட்டும் கற்றல் குறைபாட்டால் சிரமப்படுவர்.

இந்நோய் குறித்த விழிப்புணர்வு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் இல்லை; அதனால், பாதிப்புள்ள மாணவ, மாணவியர் பொதுத்தேர்வை சந்திக்கும்போது, தேர்ச்சி பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. துவக்கத்திலேயே இந்நோயின் பாதிப்பை அறியும் பட்சத்தில், அவர்களுக்குதனிப்பயிற்சி அளிக்கும் வாய்ப்புள்ளது.ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ""சில மாநிலங்களில், "டிஸ்லெக்சியா' நோய் பாதிப்புள்ள குழந்தைகள் அதிகளவில் உள்ளனர். தமிழகத்தில் 220 பேர் வரை இருப்பதாக, கடந்தாண்டு பொதுத்தேர்வின்போது தெரிய வந்தது. "டிஸ்லெக்சியா' நோய் அறிகுறி வெளிப்படையாக தெரிவதில்லை. பள்ளிதோறும், இந்நோய் குறித்த மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தினால்,நோய் பாதிப்புள்ள குழந்தைகளை கண்டறிய முடியும். மாணவர் நலன் கருதி, இதற்கான நடவடிக்கையை கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும்,' ன்றார்.

2 comments:

  1. very very appreciable article. Excellent.. All TEACHERS should get awareness of these type of problems among our children.. OUR GOVT. should take proper response towards these type of children.. Any way teachers pls understand about your children.. dont get tension on these children.. Save our society.. PLS SEE Tharae zamen per film..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி