சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் அமைப்பின் தலைவர் கே.பாலு தாக்கல் செய்த மனு:
சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பெங்களூரு தனி நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. சட்டத்துக்கு கட்டுப்படுவேன் என உறுதிமொழி எடுத்த எம்.பி.,க்கள் எம்.எல்.ஏ.,க்கள், தாங்கள் எடுத்த உறுதி மொழியை மீறுகின்றனர்; நீதித் துறையை, அவமரியாதை செய்கின்றனர். பள்ளிகள், கல்லூரிகளை மூடுமாறு வற்புறுத்தியதன் பேரில், 7ம் தேதி, தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், பாதிக்கப்படுவது மாணவர்கள் தான். கல்வித் துறையின் ஒப்புதல் இல்லாமல், தனியார் பள்ளிகள், கல்லூரிகள், விடுமுறை அறிவிக்க உரிமை இல்லை. எனவே, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட தடை விதிக்க வேண்டும். அறிவிப்பு, சட்ட விரோதமானது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. தி.மு.க., அமைப்பு செயலரும், வழக்கறிஞருமான, ஆர்.எஸ்.பாரதி, மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின், சென்னை கிளையின் செயலர், வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் ஆகியோரும் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
தங்கள் தரப்பில் தாக்கல் செய்த மனுவை, அவசரமாக விசாரிக்க கோரி, உயர் நீதிமன்ற தலைமை
நீதிபதியிடம், வழக்கறிஞர் வைகை முறையிட்டார். அதையடுத்து, நீதிபதிகள் வைத்தியநாதன், மகாதேவன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' ஏற்படுத்தப்பட்டது. மாலை, 6:30 மணிக்கு உயர்
நீதிமன்றத்தில், நீதிபதிகள், வழக்கை விசாரித்தனர். மூத்த வழக்கறிஞர் வில்சன், வழக்கறிஞர்கள் மோகன், கே.பாலு ஆஜராகினர். நீதிபதியை அவதூறு செய்யும் வகையில், 'போஸ்டர்'கள் அச்சடித்திருப்பதை, நீதிபதிகளிடம் வழக்கறிஞர்கள் காட்டினர். அரசு பிளீடர் மூர்த்தி, ''போராட்டம் நடத்த அரசு அனுமதியளிக்கவில்லை. பள்ளி, கல்லூரிகள் தரப்பில், அனுமதி கோரவும் இல்லை; அவர்களாக அறிவித்துள்ளனர். வாபஸ் பெற்று விட்டதால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கும். சட்டம் ஒழுங்கை, போலீசார் கவனித்து கொள்வர்,'' என்றார்.
மனுக்களை விசாரித்த, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, சுற்றறிக்கையை வாபஸ் பெற்றுள்ளது. பள்ளிகள், சுமுகமாக இயங்க வேண்டும். மாணவர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை, அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது. நீதித் துறையை அவதூறாக விமர்சித்தது, அரசு இயந்திரத்தை சீர்குலைக்க வைப்பது தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையை, 8ம் தேதிக்கு, 'டிவிஷன் பெஞ்ச்' தள்ளி வைத்தது.
Good morning friends today may be one good news for minority adw etc candidates but it depends on the relaxation judgement copy
ReplyDeleteGood morning friends Nalla kalam pirakkattum.
ReplyDeleteMadurai court relaxation case copya kotuthucha illaiya atha kotukkama antha court ennathan pannuthu..namma lifela vilaiyaturathe velaiya pochu intha government ku
ReplyDeleteGood morning friends .is there any chance for pg 2nd list please share me the updates
ReplyDelete