ஜெயலலிதாவுக்கு ஆதரவாக, தனியார் பள்ளி, கல்லூரிகளை இன்று ஒரு நாள் அடைக்கும் போராட்டத்தை நடத்துவதாக வெளியிட்ட அறிவிப்பை, கடைசி நேரத்தில், வாபஸ் பெற்றனர் பள்ளி, கல்லூரி சங்க நிர்வாகிகள். பொதுமக்கள் கடும் எதிர்ப்பு மற்றும் அடைப்பிற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது தான், வாபஸ் பெற்றதற்கு காரணம்.
ஜெ., சிறைக்கு சென்றதில் இருந்து, அவருக்கு ஆதரவாக, பல தரப்பினர், ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 'லெட்டர் பேடு' கட்சி முதல், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் வரை, 'ஜெ.,வுக்கு ஆதரவாக போராடினோம்' என்பதை, பதிவு செய்வதற்காகவே, போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்த வரிசையில், கல்வித்துறை மட்டும், 'மிஸ்' ஆகி இருந்த நிலையில், கடந்த, 4ம் தேதி இரவு, 'ஜெ.,வுக்கு ஆதரவாக, 7ம் தேதி (இன்று) ஒரு நாள், தனியார் பள்ளிகள் மூடப்படும்' என, தனியார் பள்ளி சங்க கூட்டமைப்பு செயலர், இளங்கோவன் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, 'சுயநிதி பொறியியல் கல்லூரிகளும் மூடப்படும்' என்ற அறிவிப்பை, சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்பின் நிர்வாகி, செல்வராஜ் அறிவித்தார். இதனால், இன்று, தனியார் பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்படும் சூழல் ஏற்பட்டது.
எதிர்ப்பு:
சங்க நிர்வாகிகளின் அறிவிப்பிற்கு, பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தி.மு.க., தலைவர், கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள், கடும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன், பள்ளி, கல்லூரி அடைப்பிற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று, அவசர பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது போன்ற இக்கட்டான நிலையில், பள்ளி, கல்லூரியை அடைத்தால், அது, தமிழக அரசுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தும் என, பள்ளி, கல்லூரி நிர்வாகிகள் அஞ்சினர். இதனால், நேற்று பிற்பகல், அவசரம் அவசரமாக, பள்ளி, கல்லூரி அடைப்பு போராட்டத்தை, 'வாபஸ்' பெற்றனர். இளங்கோவன், தர்மபுரியிலும், செல்வராஜ், திருச்சியிலும், அறிவிப்பை வெளியிட்டனர். இதனால், இன்று வழக்கம் போல், தனியார் பள்ளிகளும், பொறியியல் கல்லூரிகளும் இயங்கும்.
அசம்பாவிதம் ஏற்படுமா?
காலாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின், தமிழகம் முழுவதும், இன்று, மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஆளுங்கட்சியினரின் போராட்டம் தீவிரம் அடைந்து வருவதால், பள்ளிகளில் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகி உள்ளது.இது குறித்து, கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'பள்ளிகளில், பாதுகாப்பு ஏற்பாடு எதுவும் செய்யவில்லை. பள்ளிகளில், எந்த பிரச்னையும் ஏற்படாது என, நம்புகிறோம்' என்று தெரிவித்தது.
பின்னணியில் ஆளுங்கட்சி?
ஜெ.,வுக்கு ஆதரவாக, பல போராட்டங்களை, அ.தி.மு.க.,வினர் நேரடியாக களத்தில் நின்று நடத்தி வருகின்றனர். சில வகை போராட்டங்களை, பின்னணியில் இருந்து நடத்துவதாகவும் கூறப்படுகிறது. இரண்டாவது வகையில், தனியார் பள்ளி, பொறியியல் கல்லூரியை மூடும் போராட்டமும் அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.தனியார் பள்ளி சங்க கூட்டமைப்பின் செயலரான இளங்கோவனை, ஆளுங்கட்சியின் முக்கிய புள்ளி ஒருவரே, தூண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. இளங்கோவன் பேட்டி வெளியான பிறகும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், மவுனம் காத்தது, ஆளுங்கட்சி பிரமுகரின் தலையீட்டை
உறுதிப்படுத்துகிறது. தனியார் பள்ளி அடைப்பு அறிவிப்பு செய்தி, ஆளுங்கட்சி 'டிவி'யில், தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டது தான், அதிகாரிகள் மவுனத்திற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.கடைசி நேரத்தில், விவகாரம் சிக்கலாக மாறியதால், சங்க நிர்வாகிகள் பல்டி அடித்தனர்.
தனியார் பள்ளி நிர்வாகிகள் சென்னையில் இன்று கூட்டம்:பள்ளி மூடும் போராட்டத்தை கைவிட்ட போதிலும், பள்ளி தாளாளர்கள், கல்வித் துறை இயக்குனர் வளாகத்தில், இன்று காலை, கூட்டம் நடத்துகின்றனர்.
இது குறித்து, தனியார் பள்ளி சங்க கூட்டமைப்பின் செயலர், இளங்கோவன் கூறியதாவது:மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், 7ம் தேதி, தேர்வு நடப்பதை கருத்தில் கொண்டும், எங்களது, முந்தைய முடிவை மாற்றி, இன்று, அனைத்து சுயநிதி பள்ளிகளையும் திறப்பது என,முடிவு எடுக்கப்பட்டுள்ளது.எனினும், ஜெ.,வின் விடுதலையை வலியுறுத்தி, அனைத்து சுயநிதி பள்ளி நிர்வாகிகள் மட்டும் கலந்து கொள்ளும் கவன ஈர்ப்பு கூட்டம், திட்டமிட்டபடி, இன்று, பள்ளிக்கல்வி இயக்குனர் வளாகம் அருகில் நடக்கும். இதில், பள்ளி தாளாளர்கள் மட்டும் கலந்து கொள்வர். இவ்வாறு, இளங்கோவன் தெரிவித்தார்.
கல்வித்துறை வளாகத்திற்குள், பள்ளி தாளாளர்கள் கூடுவதற்கு, போலீசார், அனுமதி வழங்கவில்லை. இதனால், மின் வாரிய அலுவலகம் அருகே, கூட்டம் நடக்கும் என, தெரிகிறது.
தேவையா இந்த போராட்டம்?
தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்த போராட்டத்திற்கு, பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
சென்னை, தி.நகரைச் சேர்ந்த பார்த்தசாரதி:ஏற்கனவே காலாண்டு தேர்வு மற்றும் பண்டிகை கால விடுமுறைகள் முடிந்து, மாணவர்கள் மனதளவில் தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கும் போது, பள்ளிகள் துவங்கும் நேரத்தில் இதுபோன்ற அறிவிப்புகள் வெளியாவது, அவர்களின் கல்வி கற்கும் மனநிலையை வெகுவாக பாதிக்கிறது.பொது நலனுக்காக எடுக்கப்படும் இது போன்ற முடிவுகள், மாணவர்கள் நலன் குறித்து சிறிதளவும் அக்கறை இல்லாததையே காட்டுகிறது.தனியார் பள்ளிகளின் இந்த போக்கு, மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை வழிகாட்டுவதில் இருந்து தவறி விடுவதையே காட்டுகிறது.
தனியார் பள்ளிகளின் வேலை நிறுத்தம் பற்றி பெற்றோர் கருத்து
அருணா, தாம்பரம்:அரசியல்வாதிகள், கல்வி நிறுவனங்களை நடத்தக் கூடாது. கல்வியில், அரசியலை நுழைக்கக் கூடாது. தனியார் பள்ளிகளை மூடி, அரசியல் ஆதாயம் தேடிக்கொள்ள கல்வி நிறுவனங்களின் முதலாளிகள் முனைவது, மிகுந்த வேதனையளிக்கிறது. இது போன்ற செயல்களில், அவர்கள் இறங்குவது மிகுந்த கண்டனத்துக்குரியது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் தேர்வுகள் நடக்கவுள்ளன. அதற்கான பாடத்திட்டங்களை பள்ளிகள் நடத்த வேண்டியுள்ளது. இந்த
விடுமுறைகளால், சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவர். அல்லது, பாடங்களை நடத்தாமல் விட்டுவிடுவர். எப்படி இருந்தாலும், பாதிக்கப்பட போவது, மாணவர்கள் தான்.
இந்துமதி, அடையாறு:இந்த மாதிரி, தேவையில்லாத விடுமுறை விட்டு, பொதுமக்களை விரோதிகளாக்கி கொள்ளத்தான், பள்ளிகளும், அ.தி.மு.க.,வும் முனைகின்றன. நீதிமன்ற தீர்ப்புக்கும் மாணவர்களுக்கும் என்ன தொடர்பு? இப்படி, ஒவ்வொரு அரசியல் கட்சியும் விடுமுறை விட துவங்கினால், கல்வித்துறையில் எப்படி உண்மைத் தன்மை இருக்கும்?
குமார்,அண்ணாநகர்:ஏற்கனவே, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, 10ம் வகுப்பு பாடத்தையும், பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு பிளஸ் 2 வகுப்பு பாடத்தையும் நடத்தி, 'ரிசல்ட்' காட்டி, பெயரெடுத்து கொள்ள நினைக்கும் தனியார் பள்ளிகளின், இந்த செயல் வியப்பளிக்கிறது. இந்த நாட்களை, எப்படி ஈடுகட்ட போகின்றனர்?பெற்றோரும், மாணவர்களும் அவர்களின் அடிமையா? அவர்களின் கருத்து தான், பெற்றோரின் கருத்தா?
பிரியங்கா, ஆவடி:படித்தவர், பாமரர் என்ற வேறுபாடில்லாமல், தீக்குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது. ஒரு நீதிமன்ற தீர்ப்பை, கேலிக்கூத்தாக்கும் பணியில், அரசியல் தலைவர்கள் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது.ஒரு ஆட்சிக்கும், கட்சியிக்கும் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாவலாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது.பள்ளி, கல்லூரிகளை அரசியல் கண்ணிக்குள் சிக்க வைக்க நினைப்பது, ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு அஸ்தமனத்தை ஏற்படுத்தும்.
கிருஷ்ணன், அம்பத்தூர்:பாடசாலைகள், வியாபார தலங்கள் என்பதை தான், இந்த நிகழ்வு காட்டுகிறது. கல்வியில் அரசியல் சாயம் பூசி, மாணவர்களின் சிந்தனையை மழுங்கடிப்பதை விட, கேவலமான செயல் வேறெதுவும் இல்லை.இப்படி செய்வதால், அரசியல்வாதிகளிடம், தங்களை விசுவாசிகள் என்று வேண்டுமானால் காட்டிக்கொள்ளலாம். ஆனால், சமூகத்தின் மனசாட்சிக்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வந்தே தீரும்.யார் ஆட்சிக்கு வந்தாலும், மக்கள் உழைத்தால் தான் சாப்பாடு கிடைக்கும். அவர்களின் அன்றாட செயல்களில் குறுக்கிடுவதே, அரசியல்வாதிகளுக்கு பிழைப்பாக இருக்கிறது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி