டயர்களில் எத்தனை வகை? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2014

டயர்களில் எத்தனை வகை?

வாகனங்களின் சீரான ஓட்டத்துக்கு முக்கியப் பங்கு வகிப்பவை, டயர்கள். டயர்களில் பல வகைகள் உள்ளன. உங்கள் கார்/பைக்கின் செக்மென்ட், நீங்கள் பயணிக்கும் இடத்தின் தன்மை, உங்கள் பயணம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பொறுத்து, தேவைப்படும் டயர்களை நீங்களே உங்கள் விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம். இப்போது ட்யூப்லெஸ் டயர்கள் ஃபேமஸாகி விட்டன. சாதாரண ஸ்கூட்டர்களில்கூட ட்யூப்லெஸ் டயர்கள் வந்துவிட்டன. கார், பைக் நிறுவனங்களும் இதைத்தான் பரிந்துரைக்கின்றன. ஆனால், இதை எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியாது. டயர்களில் எத்தனை வகை என்பதைப் பார்ப்போமா?

பெர்ஃபாமென்ஸ் அல்லது சம்மர் டயர்

அதிவேகமான அல்லது பெர்ஃபாமென்ஸ் கார்களுக்காக இந்த டயர் தயாரிக்கப்படுகிறது. சாதாரண கம்யூட்டிங் ரைடிங்கைவிட, ‘இன்னும் கொஞ்சம் பெட்டரா, ஹார்டரா இருக்கணும்’ என்று விரும்புபவர்களுக்கான சாய்ஸ், இந்த சம்மர் டயர். இவை ஸ்லிம் அண்டு ஸ்லீக் டிஸைனில்தான் வடிவமைக்கப்படுகின்றன. சாஃப்ட்டான ரப்பர் கலவையால் செய்யப்படுவதால், இவை எடை குறைவாக இருக்கும். இதிலுள்ள ட்ரெட் டிஸைன்கள், ஒரே திசையில் சாய்வாக வடிவமைக்கப்பட்டிருப்பதால், வேகமாகச் செல்லும்போது, ஈரமான சாலைகளில் தண்ணீரை பம்ப் செய்து சுலபமாக வெளியேற்றும். மேலும், இவை அகலமாகவும் இருப்பதால், கிரிப் அதிகமாகக் கிடைக்கும்; ஆனால், காருக்குள் அதிக சத்தம் கேட்பதைத் தவிர்க்க முடியாது. ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ் போன்ற கார்களில் இருப்பவை பெர்ஃபாமென்ஸ் டயர்கள்தான்.

ஆல் சீஸன் டயர்

பெரும்பான்மையான சின்ன கார்கள், செடான்களில் இந்த ஆல் சீஸன் டயர்களைக் காணலாம். பெர்ஃபாமென்ஸ், கிரிப், நீண்ட வாழ்நாள் தன்மை என்று எல்லாவற்றையும் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த வகை டயர்களில் வெளிச்சத்தம் குறைவாக இருக்கும். கடினமான ரப்பர் கலவையால் உருவாக்கப்படுவதால், இந்த டயர்களில் கார்னரிங் மற்றும் கிரிப் குறைவாக இருக்கும். ஆனால், நீண்ட நாள் உழைக்கும் தன்மை கொண்டவை.

இந்த டயர்களில் உள்ள ட்ரெட் டிஸைனால், தண்ணீர் தேங்கி நிற்கும் சாலையில் செல்லும்போது, தண்ணீரை ஓவராக சிதறடிக்கும் என்கிறார்கள். மேடு, பள்ளமான சாலைகள் என்றால், இந்த ஆல் சீஸன் டயர்களுக்குச் சுத்தமாக ஆகாது. சஸ்பென்ஷனைப் பதம் பார்க்கும் வாய்ப்பும் அதிகம். ஈரமான சாலைகளிலும், மோசமான சாலைகளிலும் கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும். விலை குறைவு, நீண்ட நாள் உழைக்கும் தன்மை ஆகியவற்றால், இந்த ஆல் சீஸன் டயர்கள், ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் நல்ல பெயர் எடுத்திருக்கின்றன. இப்போதுள்ள பெரும்பான்மையான ஹேட்ச்பேக், செடான் கார்களில் இருப்பவை ஆல் சீஸன் டயர்கள்தான்.

வெட் வெதர் டயர்

பெர்ஃபாமென்ஸ் டயர்களில் இருப்பது சாஃப்ட்டான ரப்பர் காம்பவுண்ட் என்றால், இந்த வெட் வெதர் டயர்கள், அதைவிட இன்னும் லேசான ரப்பர் கலவையால் தயாரிக்கப்படுகின்றன.

இந்த ரப்பரின் அசாத்திய தன்மை என்னவென்றால், ஈரமான சாலைகளில் விரைவாக சூடாகி, அந்த இடத்துக்குத் தேவையான கிரிப்பையும், பெர்ஃபாமென்ஸையும் அதிகப்படுத்த உதவுகிறது.

ஸ்நோ மட் அல்லது ஐஸ் (ஸ்பெஷல் வின்ட்டர் டயர்):

இந்த ஸ்பெஷல் வின்ட்டர் டயர்கள், குளிர்காலத்தின்போது பனி படர்ந்த சாலைகளில் எக்ஸ்பெர்ட்டாகச் செயல்படுபவை. உருவத்தில் பெரிதாகவும், சத்தம் ஏற்படுத்தும்படி பெரிய த்ரெட்டுகளாகவும் இதன் வடிவம் இருக்கும். சில எக்ஸ்ட்ரீம் ஸ்நோ டயர்களில், த்ரெட்டுகளின் நடுவில் சின்ன மெட்டல் ஸ்டட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். இவை பனிக்கட்டிகள் மற்றும் சின்னச் சின்ன திட வடிவப் பொருட்களைக் காலி செய்யும் தன்மைகொண்டவை. ஆனால், சாதாரண சாலைகளில் இவை பேரிரைச்சலை ஏற்படுத்தும் என்பதால், பெரும்பான்மையானவர்கள் இதை பயன்படுத்துவது இல்லை.

ஆல் டெரெய்ன் டயர்

பெரும்பான்மையான எஸ்யுவி மற்றும் ட்ரக்குகளில் இருப்பது ஆல் டெரெய்ன் டயர்கள்தான். டயர்களில் பெரிய த்ரெட் இருந்தாலே, சாதாரணச் சாலைகளில் பயணிக்கும்போது சத்தம் அதிகமாக இருக்கும்; கிரிப் குறைவாகவே இருக்கும். ஆனால், சேறு சகதி நிறைந்த ஆஃப் ரோடு ஏரியாவில் கிரிப் அதிகமாகக் கிடைக்கும். இந்த வகை டயர்களில் சாஃப்ட்டாகவும் இல்லாத, கடினமாகவும் இல்லாத ரப்பரால் தயாரிக்கப்படுபவை.

மட் டயர்

ஆல் டெரெய்ன் டயரின் எக்ஸ்ட்ரீம் வடிவம்தான் மட் டயர். ஆல் டெரெய்னைவிட பெரிய அளவில் த்ரெட்டுகள் இருப்பதால், நிச்சயம் இதை சாதாரணச் சாலைகளில் ஓட்டுவதற்கு நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஆனால் சேறு சகதிகள் நிறைந்த ஆஃப் ரோடு பயணங்களில் கொஞ்சம்கூடப் பயப்படத் தேவையில்லை.

6 comments:

 1. அடங்கப்ப டிரெயினிங் முடிச்சு வெளில வந்தா 1000 பேர் பஸ்சுக்கு நிக்குறாங்க
  கிருஸ்னகிரில இருந்து சேலம் வரதுக்கே மணி 9.50 இனி நான் கோயம்புத்தூர் போறக்கு நைட்டு ரென்டாயிரும் போலிருக்கு
  கூட்ட நெரிச்சல்ல எவனோ நாத்தமுத்து அடிக்கடி லீலைய காட்ட முடியலடா சாமி
  பஸ்ல பத்து நிமிசம் கண்ண மூட முடியல தீபாவளி பிஜிலி வெடி மாதிரி கன்டினீயூசா
  நல்ல வேல ஏசி பஸ்சில்ல
  சை என்ன கொடுமடா இது

  ReplyDelete
  Replies
  1. கவுண்டரே நீங்க கோயமுத்தூர் ஆளா...

   Delete
  2. அப்சலூட்லி
   நீங்க எந்தூருங்னா

   Delete
  3. அப்சலூட்லி
   நீங்க எந்தூருங்னா

   Delete
 2. BC TAMIL MAJOR WEIGHTAGE 67.50 ABOVE CANDIATES PLEASE CALL ME 8883773819

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி