பள்ளிகூடத்தில் அம்மா!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2014

பள்ளிகூடத்தில் அம்மா!!!


எப்பொழுதும் போல் ஆசிரியை திருமதி தாம்ஸன் வகுப்பறைக்கு பாடம் எடுக்க செல்லும் போது சொல்லும் வார்த்தை “I love you all”. இதை உள்ளன்போடுசொல்லாமல் மேலோட்டமாகவே சொல்கிறோம் என்பது அந்த ஆசிரியைக்கும் தெரியும்.

அந்த பள்ளியில் டெடி என்னும் மாணவன் மற்ற குழந்தைகளை விட மாறு பட்டிருக்கிறேன். எதற்கெடுத்தாலும் ஆசிரியை அந்த மாணவனுடைய எதிர்மறையான பண்புகளை மட்டும் உதாரணத்திற்க்கு எடுத்துக்கொள்வார், அவனுடைய நல்ல பண்புகளை விட்டுவிடுவார்.

முதல் காலாண்டு தேர்வுக்கான PROGRESS REPORT தயாரித்து தலைமை அசிரியரின் பார்வைக்கு வைத்தார். அப்போது டெடியின்- PROGRESS REPORT-ஐ பார்த்து விட்டு, ஆசிரியையிடம் கேட்டார் PROGRESS REPORT என்பது மாணவனின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அப்போது ஆசிரியயை தலைமை அசிரியரிடம் மாணவனைப்பற்றி குறிப்பாக சொல்வதற்க்கு ஒன்றும் இல்லை என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார்.பிறகு டெடியின் கடந்த கால PROGRESS REPORT-ஐ தேடி எடுத்து அசிரியையின் பார்வைக்கு அனுப்பி வைத்தார்.

3-ம் வகுப்பு மற்றும் 4-ம் வகுப்பு PROGRESS REPORT-ஐ பார்த்து ஆசிரியயை அதிர்ச்சி அடைந்துவிட்டார், அனைத்து மாணவர்களிலும் டெடியின் அறிவு திறனை மெச்சி எழுதப்பட்டிருந்தது. 5-ம் வகுப்பு PROGRESS REPORT-ல் டெடி-ன் அம்மா புற்று நோயால் அவதிப்படுவதாகவும், அவளால் டெடி-ஐ கவனிக்க முடியாமல், இறந்து விட்டாதாகவும், நம்பிக்கை அற்ற நிலையில் இருக்கும் அவனுக்கு உதவி தேவைப்படுவதாகவும், இல்லையெனில், அறிவான டெடி-ஐ இழந்துவிடுவோம் என்று எழுதப்பட்டிருந்தது.

ஆசிரியை தலைமை ஆசிரியரிடம் கண்களில் கண்ணீர் தழும்ப, டெடி-ஐ நான் கவனித்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு. வழக்கம் போல் வகுப்பறைக்கு சென்று“I love you all” என்றார். ஆனால் டெடி-ஐ பொருத்தமட்டில் ஆசிரியை பொய் சொல்கிறார் என்று தெரிந்தது. டெடி-யும் வகுப்பறையில் கடைநிலை மாணவனாகவும், பின் தங்கிய நிலையிலும் இருந்தான்.ஆசிரியையும் தன் அணுகுமுறையை மாற்றிக்கொண்டு, அவனுடைய எதிர்மறையான பண்புகளை விட்டுவிட்டு நல்ல பண்புகளை உதாரணமாக வகுப்பறையில் சொல்ல ஆரம்பித்தார்.

அந்தவகுப்பின் இறுதி தேர்வு முடிந்து கடைசி நாளும் வந்தது. மாணவர்களும் ஆசிரியைக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள், அதில் ஒரு பரிசு மட்டும் பழைய தாளினால் சுற்றப்பட்டிருந்தது. அதை ஆசிரியர் பிரித்து பார்த்த போது, அதில் பாதி உபயோகித்த வாசனை திரவியம் அடங்கிய குப்பி மற்றும் கைவளையும் இருந்தது. இந்த பரிசு பொருட்கள் டெடியோடது என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த இரண்டுமே, டெடி-யின் அம்மா இறக்கும் தருவாயில் உபயோகித்த பொருட்கள்.ஆசிரியையும் அந்த வாசனை திரவியத்தை தன் மேல் தெளித்துக்கொண்டு, கைவளையளையும் அணிந்து கொண்டாள். அப்போது டெடி ஆசிரியரிடம் இப்போது நீங்கள் என் அம்மாவைப் போல் இருக்கிறீர்கள் என்று உள்ளன்போடு சொன்னான்.

பள்ளிப்படிப்பு முடியும் தருவாயில், ஆசிரியை தாம்ஸன் மேசையின் மேல் ஒரு கடிதம் இருந்தது. அதில் இது வரைநான் ஒரு சில ஆசிரியர்களை பார்த்திருக்கிறேன், பார்தவர்களிலே, நீங்கள் ஒருவர் தான் மிக சிறந்த ஆசிரியை. அன்புடன் டெடி- என்று குறிப்பிட்டிருந்தது. ஒவ்வொருவருடம் முடிவிலும் இதைப்போல கடிதம் டெடியிடமிருந்து அவருக்கு வந்து கொண்டிருந்தது.வருடங்கள் கடந்து போயின, தொடர்புகளும் விட்டுப்போயிற்று. ஒரு நாள் டெடியின் பிரதிநிதி, வேலையினின்று ஓய்வு பெற்ற ஆசிரியை தாம்ஸனை கண்டுபிடித்து Dr. டெடி PHd அனுப்பி வைத்ததாகவும், அவரின் திருமனத்திற்க்கு வரவேண்டி அழைப்பிதழையும் மற்றும் டெடியின் கைப்பட எழுதிய கடித்ததையும் தருகிறார்.

அந்தகடித்ததில் இது வரை நான் பல ஆசிரியர்களை பார்த்திருக்கிறேன், பார்தவர்களிலே, நீங்கள் ஒருவர் தான் மிக சிறந்த ஆசிரியை. அன்புடன் டெடி- என்று குறிப்பிட்டிருந்தது. நீங்கள் இல்லாமல் என் திருமணத்தை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. நீங்கள் வந்து போக விமான பயண சீட்டை இத்துடன் இணைத்துள்ளேன் என்று குறிப்பிட்டிருந்தது. ஆசிரியை தாம்ஸனுக்கு நிலை கொள்ளவில்லை.டெடி கொடுத்த வாசனை திரவியம் அடங்கிய குப்பி இப்போது அவரிடம் இல்லை ஆனால் கைவளையளை பாதுகாப்பாக வைத்திருந்தார். கைவளையளை அணிந்துகொண்டு திருமனம் நடக்கும் கோவிலுக்கு சென்று, கடைசி இருக்கையில் அமர்வதற்க்கு முயற்ச்சி செய்தார். ஆனால் ஊழியர்கள் அவரை அடையாளம் தெரிந்துகொண்டு அவரை அவருக்காக டெடியின் அம்மா என்ற பெயரிட்டு ஒதுக்கப்பட்ட முதல் வரிசையில் உள்ள இருக்கையில் அமரவைத்தார்கள். திருமணம்ச் சடங்குகள் முடிந்தன. டெடி, தன் மனைவிக்கு ஆசிரியை தாம்ஸனை “இவர் என் அம்மாவின் ஸதானத்திலிருந்து என்னை வழி நடத்தினார், இவர் இல்லையென்றால் நான் இப்போது உள்ள நிலையில் என்னால் இருக்கமுடியாது” என்று கண்கலங்கி அறிமுகப்படுத்தி வைக்கிறார். ஆசிரியையும் டெடி இல்லையென்றால் நானும் என்னை உணர்ந்திருக்க முடியாது.வகுப்பறையில் ஆசிரியர் குழந்தைகள் அனைவருக்கும் முதலில் ஒரு தாயாக இருக்கவேண்டும் அதன் பிறகு தான் ஆசிரியர். எனவே நீங்கள் வகுப்பறைக்கு செல்லும் போது, டெடியைப்போல மாணவன் இருக்கும் போது, நீங்கள் ஆசிரியை தாம்ஸனைப்போல இருக்கவேண்டும்.

ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை வரும் போது, நீங்கள் வகுப்பறைக்கு ஆசிரியராக செல்லாமல், பெற்றோராக செல்லவேண்டும். அப்பொழுது தான், நீங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருக்க முடியும்.ஆசிரியர்களால் ஒரு புதிய உலகத்தை படைக்க முடியும் என்று நிருபிப்போம்.

நன்றி.
மொழிபெயர்ப்பு
A ALEXANDER SOLOMON.

35 comments:

  1. Replies
    1. I really appreciate I am not a teacher but I like the teacher job now I am working in central government

      Delete
    2. Dear Admin.

      Thank you very much. Video clip is missing. I will send it it your mail id. If possible, please share it to our friends

      Delete
    3. மிக அருமையான பதிவு அலெக்ஸ் சார்... மிக்க நன்றி.

      Delete
  2. என் உடல் சிலிர்த்தது. உள்ளம் மகிழ்ந்தது.
    தாய் மொழியில் வெளியிட்டது மிகவும் சிறப்பு.
    நன்றி கல்விச்செய்தி, and My dear. Alex.
    Keep it up.

    ReplyDelete
    Replies
    1. Thank you my dear Vijayakumar, Mr Sri & All friends.

      Delete
  3. really it touched my heart.all teachers should follow this attitude.if v think v can produce so many teddy's

    ReplyDelete
  4. Trichy யில் இன்று Deo இதுபற்றி பேசினார்.

    ReplyDelete
  5. Execelent!!!!!sir

    ReplyDelete
  6. Mr raj and sivakumar both where r u

    ReplyDelete
  7. பயனுள்ள கருத்து நன்றி தலைவா.... நான் நகல் எடுத்து என் தங்கையிடம் கொடுக்குறேன் .. இந்த முறை பணிக்கு சென்றவர்.... உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  8. மதுரை 5% சலுகை மதிப்பெண் தீர்ப்பு நகல் இறுதிப்பக்கம் நமது கல்விச்செய்தியில். விரைவில்
    இன்னும் சிறிது நேரத்தில்.

    ReplyDelete
    Replies
    1. Dear Mr vijayakumar,

      Waiting for the Court Order

      Delete
  9. Dear friends after getting 5% relaxation judgment copy minority and ADW and corporation school list would be released.so we should wait for judgment copy.if 5% relaxation not applicable for remaining candidates except selected candidates then it takes nearly more than 2 months.in case applicable means final list will be released within this month October 10.
    And one thing second list for BT &PG not possible but our friends spreading only rumour news regarding that news.But only minority , corporation and Adw And Bc and mbc kallar department list only releasing.

    ReplyDelete
    Replies
    1. Dear friends,

      PG க்கு காலிப்பணியிடம் சம்பந்தமாக இது வரை Notification. வராதக்காரணத்தால் தற்போது இரண்டாவது பட்டியல் வெளியிட வாய்ப்பே தற்போது இல்லை.

      Delete
    2. mr.srinivas sir plz send your cell number

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. we r from minority so plz send your mobile number

      Delete
  10. vijay kumar sir mino & adw selec list kku 5% relax undaa illayaa sir pls...

    ReplyDelete
  11. vijay kumar sir mino & adw selec list kku 5% relax undaa illayaa sir pls...

    ReplyDelete
  12. Solomon sir,good story.thanks kalvisaithi.

    ReplyDelete
  13. இந்த தீர்ப்பு இரண்டாவது பட்டியலில் சலுகை மதிப்பெண்ணில் தேரியவர்களை பாதிப்பதாக தெரிகிறது. எனவே நீதிமன்றம் தலையிட்டு தீர்த்து வைக்கும் என நம்புவோம்.

    ReplyDelete
    Replies
    1. Vijaya Kumar Chennai sir......2nd list la kuda above 90 ku nallathu nadakatha marupdi case a.......

      Delete
    2. தாங்கள் வேலைக்கு செல்வதால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
      சில சட்ட சிக்கல்கள் வராமலும்,
      மேலும் காலதாமதம் ஏற்படாமல் இருக்க வேண்டும். அதுவே அனைவரின் விருப்பம். வாழ்த்துக்கள் நண்பரே.

      Delete
    3. Thanks vijaya Kumar sir..........

      Delete
  14. Solomon sir it's very touching. Be proub. Bcos we are teachers.

    ReplyDelete
  15. Annaivarukum vanakkam
    Vijaikumar chennai sir adw selection list pathi konjam virivaga solungal nan kukgramathil irukiren tagavaluku ungalai ethirparthu irukiren kumar

    ReplyDelete
  16. Heartly touching story. I am also like this teacher. I am waiting.....

    ReplyDelete
  17. BC TAMIL MAJOR WEIGHTAGE 67.50 ABOVE PLEASE CALL 8883773819

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி