அரசு பள்ளிகளை வலுப்படுத்த கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2014

அரசு பள்ளிகளை வலுப்படுத்த கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை

'பள்ளிகளில், தாய்மொழி கல்வியை வழங்குவதுடன், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை வலுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கல்வி உரிமைக்கான அகில இந்திய கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், பிரின்ஸ் கஜேந்திரபாபு வெளியிட்ட அறிக்கை:

கல்வி உரிமைக்கான அகில இந்திய கூட்டமைப்பு, கல்வி சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும், நவம்பர், 2ம் தேதி முதல், பிரசாரம் செய்கிறது.

இறுதியில், டிசம்பர், 4ம் தேதி, மத்திய பிரதேச தலைநகர், போபாலில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடக்கிறது. இதில், நாடு முழுவதிலும் இருந்து, கல்வி ஆர்வலர்கள் பலர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில், பல்வேறு இடங்களில், பிரசாரம் நடக்கிறது.

பள்ளிகளில், தாய்மொழி கல்வியை வழங்குவதுடன், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை வலுப்படுத்த வேண்டும்; கல்வி நிறுவனங்களில், வெளிநாட்டு அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது; மாவட்டந்தோறும், மத்திய பல்கலை துவக்க வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகள், வலியுறுத்தப்படும். இவ்வாறு, பிரின்ஸ் கூறியுள்ளார்.

1 comment:

  1. Vacancy Posting fill pannunga nu sollunga sir. Iyyo rama intha ramar case eppo varuthu...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி