உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அழைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2014

உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அழைப்பு

சென்னையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பில்லாமல் உள்ள இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி., எச்.எஸ்.சி., பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போர் சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகவேண்டும்.

10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் உதவித் தொகை விண்ணப்பங்களை பெற நந்தனம் தொழில் திறனற்றோருக்கான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவேண்டும்.

5 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்து வரும் 40 வயதுக்குள்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு வயது வரம்பு 45. விண்ணப்பிப்போர் தனியார், சுய வேலைவாய்ப்பில் ஈடுபடாமலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்கவேண்டும். அரசு நிர்ணயித்துள்ள பிற தகுதிகளையும் பெற்றிருக்கவேண்டும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஓராண்டு உயிர் பதிவேட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள், கிண்டி மகளிர் தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வித் தகுதி, குடும்ப ஆண்டு வருமானம் உச்சவரம்பு இல்லை.

ஏற்கனவே உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள், சுய உறுதி மொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

25 comments:

  1. Good morning all selected candidate's

    ReplyDelete
    Replies
    1. yanda selected teachers matum than gud mg un selected yaru nanga elam human illaya teachera iruka parunga

      Delete
  2. Hello sir, 2014_15 ம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு எவ்வித அறிவிப்பையும் இதுவரை இந்த அரசு வெளியிடவில்லை ,இனியாவது அதற்கான அறிவிப்பு வெளியாகுமா?????????? இதை பற்றிய தகவல் இருப்பின் தயவு செய்து பதிலளிக்கவும்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Good morning friends. Our list will come soon but one confusion for trb that is list would be with 5% relaxation or without relaxation only confusing for them.if our government will have given correct intimation to the trb then they ready to release list any time dear friends.

    ReplyDelete
    Replies
    1. Sir na BC female tet la 94 marks weightage 62.3 second list la enaku chance kidaikuma pls rpl

      Delete
  5. Good morning friends 2nd list eppo varum?plz share.

    ReplyDelete
  6. gm frns see www.pallikudam.com about adw list case detail...so that is the reason for delay to publish list....

    ReplyDelete
  7. gm frns see www.pallikudam.com about adw list case detail...so that is the reason for delay to publish list....

    ReplyDelete
  8. poraamai baskar (ramar).viruthu nagar..avar potta case al than namakku list late aaghthu frns.....

    ReplyDelete
  9. Be hopefull...our list will come with 5% relax very soon.....

    ReplyDelete
  10. Senthil sir including 5% relaxation list varum pls sollunga sir

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. விஜயகுமார் சார் மதுரையில் ராமர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பினை தெளிவு படுத்துங்கள் பணி நியமனத்தில் தற்போதைய நிலை எனில் எந்த நிலை 5% தளர்வுடன் கூடிய நடைமுறையா அல்லது ஆதி திராவிடர் நலத்துறை பள்ளியில் மற்ற வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பதில் ஏதேனும் மாறுபட்ட நடைமுறை உள்ளதா? தினம் ஒரு தீர்ப்பு மனம் குழம்பியே உள்ளது... கூடிய விரைவில் பனிக்கு சேரலாம் என எண்ணினேன் தற்போது அதிலும் குழப்பம் ... தயவு செய்து போக்குங்கள்...என்ன நடை முறை உள்ளது.... மாறினால் எப்படி எல்லாம் மாறலாம்...என் மின்னஞ்சல் முகவரியும் தருகிறேன் akmuni007@gmail.com

    ReplyDelete
  13. 90 above candidates around 8,000 among the 11,000 got the post. At present remaining 7,000 those who attended first C.V. want to file a case against the weightage system. G.O.71 and 5% relaxation. Majority of them didn't know how to file the case and didn't have the hope to spend money for this!! They are below poverty and they are not able to file the case also.. Those who want to file a case consider these 7000 also and file a common case for all. Then only everybody will get benefit. And most important the case also will be strengthen by the majority. The 7000 people those who are the victim of 5% RELAXATION AND G.O.71 will raise their voice against the injustice, SUPREME COURT will hear this.
    So consider them and add their name also. If majority of the people join in the case as a group the money for the lawyer also we can share and give that also will be very low for each and every candidate. Everybody can join the case and we surely win the case. Consult your lawyer and we all above 90 candidates must join together and give our address phone number to your lawyer. PLEASE CONSIDER THIS.....
    Mr. ALAN ALI , MR. VENKAT VENKAT, MR. RED FIRE please contact me through my email ksitharam21@gmail.com

    ReplyDelete
  14. கல்விசெய்தி நண்பர்களே அம்மா வெளியே வந்த பிறகுதான் எந்த
    அறிவிப்பும் வெளியாகும்

    ReplyDelete
  15. any one tell me about adw list kadavule trbenna pannudhuu

    ReplyDelete
    Replies
    1. Today after noon my friends called to trb office, in trb they said"process going on it will take one month".

      Delete
  16. RATION KADAIYIL SARIYA VELA SEYYYALANA SQUAD PUDIKUDHU INDHA TRB YA ENDHA SQUAD UM PUDIKALAYE

    ReplyDelete
  17. FIRST PASS MARK 90 APURAM 82 IPO 90 ENNADA PANRINGA SEMA SAADHANAI .ABOVE 90 EDUTHA IVALO PER ILICHA VAAYANA IDHU TRB KUM GOVT KUM PURIYALAYA

    ReplyDelete
  18. Oct 10, 2014




    ஆதிதிராவிடர் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் : தற்போதைய நிலைதொடர உத்தரவு.




    அரசு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், ஆசிரியர்கள் நியமனத்தை எதிர்த்து தாக்கலான வழக்கில், 'தற்போதைய நிலை தொடர வேண்டும்' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
    ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டி ராமர் தாக்கல் செய்த மனு:

    நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி. இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் 64.23 மதிப்பெண் பெற்றேன். இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கு, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு விடுத்தது.'அரசு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், 669 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடம், ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள் மூலம் நிரப்பப்பட்டுள்ளது. காலிப்பணியிடம் எதுவும் இல்லை,' என ஆக.,21ல் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நியமனங்களில் இடஒதுக்கீடு பின்பற்றவில்லை. ஆதிதிராவிடர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என விதிகளில் குறிப்பிடவில்லை. இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டிருந்தால், எனக்கு வேலை கிடைத்திருக்கும். ஆசிரியர்களை (669பேர்) நியமித்ததாகக்கூறி வெளியான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் வி.சசிக்குமார் ஆஜரானார்.நீதிபதி உத்தரவு: பணி நியமனங்களைப் பொறுத்தவரை, தற்போதைய நிலை தொடர வேண்டும். பள்ளிக் கல்வித் துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அக்., 14 ல் பதில் மனு செய்ய, நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி