உதான் கல்வி திட்டம் குறித்து மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2014

உதான் கல்வி திட்டம் குறித்து மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்

இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ மட்டும் அல்லாமல் அனைத்து மாநிலக் கல்வி முறையில் 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவிகள் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு உதான் கல்வி திட்டத்தின் மூலம் ஐஐடி மற்றும் என்ஐடிகளில் சேரும் வகையில் பயிற்சி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டத்துக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறும் மையங்கள் தமிழகத்தில் இரண்டே இடங்களில் மட்டும்தான் அமைக்கப்பட்டுள்ளது. அதிலும், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பயிற்சி வகுப்பு மையம் அமைக்கப்படாததால், அந்த நகரத்தில் உள்ள தகுதி வாய்ந்த மாணவிகள் உதான் திட்டத்தால் பயனடைய முடியாமல் போகும்.

எனவே, உதான் திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்பு மையங்களை தமிழகத்தில் அதிக அளவில் துவக்கவும், உதான் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டித்து கால அவகாசம் அளிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

1 comment:

  1. hello Sri sir, can u pls send t5% cancel Court copy that u have already publused in kalviseithi.that one i couldn't download from this site. so u pls to my mail id sethupandianramadevi@gmail.com,
    sethupandianramdevi@yahoo.com.its very urgent for my BT post processing.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி