தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு மின்சார வாரியம், தேயிலைத் தோட்டக் கழகம் , பொதுத்துறை சர்க்கரை ஆலை ஆகியவற்றில் பணியாற்றும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ்மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் சி மற்றும்டி பிரிவு பணியாளர்களுக்கும் 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசுதெரிவித்துள்ளது. மொத்தத்தில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு 221 கோடியே 75 லட்சம் ரூபாய் போனஸ் ஆக வழங்கப்படும் என முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி