தமிழாசிரியர்கழக தலைவராக மருதவாணன் தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 12, 2014

தமிழாசிரியர்கழக தலைவராக மருதவாணன் தேர்வு

தமிழக தமிழாசிரியர் கழகத்தின் மாநில தலைவராக, நன்னிலம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மருதவாணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக தமிழ் ஆசிரியர் கழகத்தின், 2014 - 2017 காலத்திய மூன்றாண்டுகளுக்கான நிர்வாகிகள் தேர்தல், திருச்சி, தில்லை நகர், விசுவநாதம் மழலையர் பள்ளியில் நடந்தது. திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், மருதவாணன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலராக இளங்கோ, பொருளாளராக கோவிந்தன், இணை செயலராக ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டனர். இதுதவிர, மண்டல அளவில் ஐந்து துணைத் தலைவர்கள், ஐந்து துணைச் செயலர்கள், தேர்வுச் செயலர் ஒருவர், தணிக்கையாளர்கள் இருவர்,

மேல் முறையீட்டுக் குழுவுக்கு இரண்டு பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி