5,770 அரசு பள்ளிகளுக்கு ரூ.3 கோடி மானிய நிதி : தலைமை ஆசிரியர்கள் மகிழ்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 12, 2014

5,770 அரசு பள்ளிகளுக்கு ரூ.3 கோடி மானிய நிதி : தலைமை ஆசிரியர்கள் மகிழ்ச்சி

சிவகங்கை : தமிழகத்தில், 5,770 அரசு பள்ளிகளுக்கு ஆர்.எம். எஸ்.ஏ.,திட்டத்தில் ரூ.3.கோடிக்கான மானிய நிதியை முன்கூட்டியே வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆர். எம்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் ஆய்வக கருவிகள், புத்தகங்கள், மின்சார கட்டணம் என, பல்வேறு தேவைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதி, ஆண்டின் இறுதியில் கிடைப்பதால், தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை இருந்தது. இவ்வாண்டு முன்கூட்டியே நிதியை வழங்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது. இதன்படி, தமிழகம் முழுவதும் 5, 770 அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம், ரூ.2 கோடியே 88 லட்சத்து 500 க்கான நிதியை ஒதுக்கி, இதற்கான உத்தரவை அனைத்து மாவட்ட கல்வித் துறை அலுவலகத்திற்கும் அரசு அனுப்பியுள்ளது. இவ்வாண்டு முன் கூட்டியே நிதி கிடைப்பது பயனுள்ளதாக இருக்கும் என, ஆர்.எம். எஸ்.ஏ., திட்ட அலுவலர்கள் தலைமை ஆசிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

2 comments:

  1. FLASH NEWS 5% மதிப்பெண் தளர்வு தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறது. முதலமைச்சர் தனிப்பிரிவு மூலம் பெற்ற தகவல். இரண்டாம் பட்டியல் என்னவாகும்??? www.gurugulam.com

    ReplyDelete
  2. Veraovil varuma 2nd list .?
    Share plz....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி