ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீது வரும் வெள்ளிக்கிழமை விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 13, 2014

ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீது வரும் வெள்ளிக்கிழமை விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு


ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீது வரும் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜாமினில் விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதாவுக்கு ஜாமின் வழங்க கடந்த 7ம் தேதி, கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்ததைஅடுத்து, கடந்த 9ம் தேதி அவரது சார்பில் உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், உடல்நிலை மற்றும் வயதுஅடிப்படையில் ஜாமின் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில், சொத்துகுவிப்பு தொடர்பான வழக்கிற்கு, எவ்வித இடையூறும் ஏற்படுத்தவில்லை என்றும், தற்போது அந்தப் பதவியில்இல்லாததால், வழக்கிற்கு தம்மால் எவ்வித தடையும் ஏற்படாது எனவும் ஜெயலலிதா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை அடுத்து கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பிலும் ஜாமின் கேட்டு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

22 comments:

 1. PLEASE PUUBLISH SECOND LIST AMMA ........WE ARE ALWAYS SUPPORTING YOU

  ReplyDelete
 2. Yarukum theryathu sir epo varum nu. Ceo ke theryala sir. Apo nama ena pandrathu. Wait panuvom .

  ReplyDelete
 3. Second list addendum may be released this week
  Sairam

  ReplyDelete
 4. please understand the feelings of above 90

  ReplyDelete
 5. anyone share about today korikkai

  ReplyDelete
 6. இன்றைய கோரிக்கை என்ன ஆச்சு நண்பர்களே ?

  ReplyDelete
 7. ஆதி திராவிடர் மற்றும் சிறுபான்மையினர் ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிட கோரிக்கை.ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரை சந்திக்க அனுமதி கிடைக்காததால் பட்டதாரிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தை முற்றுகையிட்டனர்-புதிய தலைமுறை

  ReplyDelete
  Replies
  1. They met deputy secretary of elementary education in secretariat...

   Delete
  2. When will release list farooque bhai

   Delete
 8. nan pg commerce major enaku same cutoffla job miss ayiduchu so welfare schools list epa varum anybody tell ple. my number 9842891676

  ReplyDelete
 9. ஆசிரியர் தேவை என இதுவரை Welfare Dept. ல் இருந்து PG சம்பந்தமாக எந்த வேண்டுதலும் TRB க்கு வரவில்லை.
  அப்படி இருக்கையில் எப்படி எதிர்பார்க்க முடியும் நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. Sir govt eppo Mel muraiyeedu seiyum about 5% please reply

   Delete
  2. My dear Farooq.

   இன்னும் CC copy வரவில்லை.

   வந்தவுடன்தான் மேல்முறையீடு செய்யமுடியும்.

   Delete
  3. Supreme Court senior lawyer Tomorrow will file at supreme court against 5% Relax.

   Delete
 10. Dear Vijayakumar sir, I am PG Commerce and I got 97 marks Tamil Medium. In final selection list some seats were reserved for tamil medium candidate. when TRb will this seats by next cutoff marks. pls reply

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி