பரிதாப நிலையில் பகுதிநேர ஊழியர்கள்: நூலகத்துறையை கண்டுகொள்ளாத அரசு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2014

பரிதாப நிலையில் பகுதிநேர ஊழியர்கள்: நூலகத்துறையை கண்டுகொள்ளாத அரசு.


வேலை நாட்களுக்கு மட்டும் தினமும் 20 ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாலும், வேறு எந்த அரசு சலுகைகளும் கிடைக்காததாலும், மாதம் 400 ரூபாய் சம்பளம் கூட கிடைக்காமல் பகுதிநேர நூலகர்கள் மனம் நொந்த நிலையில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர்.
நூலகத்துறையை தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லை.

இத்துறையில் 20க்கும் மேற்பட்ட மாவட்ட நூலக அலுவலர் பணியிடம் மூன்றாண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளது. இப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவே இல்லை. அதேபோல் 35க்கும் மேற்பட்ட முதல்நிலை ஆய்வாளர் பணியிடங்களும் காலியாகவே உள்ளன. இப்பணியிடங்களும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன.இதேபோல் நூலகர் பணியிடங்கள், பகுதிநேர நூலகர் பணியிடங்கள் என காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தொடர்கதையாகிறது. பணிபுரிபவர்களுக்கு மனிதநேய சலுகைகள் கூட வழங்கப்படுவதில்லை. தமிழகம் முழுவதும் 16 ஆண்டுகளாக பணிபுரியும் பகுதிநேர ஊழியர்களுக்கு எந்த பணிப்பலன்களும் வழங்கப்படவில்லை.1800 பகுதிநேர நூலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இதுவரை தினமும் 20 ரூபாய் சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது. அதுவும் வேலை நாட்களில் மட்டும்தான் சம்பளம். மாதம் 10 நாட்கள் வரை விடுமுறை வந்து விடுகிறது.

எனவே, இவர்களது மாதச்சம்பளமே 400 ரூபாய்தான். அதுவும் முறையாக வழங்கப்படுவதில்லை. என்றாவது ஒருநாள் நமக்கும், அரசு ஊழியர்களை போல் சலுகைகளும், சம்பளமும் கிடைக்கும் என்ற ஆசையில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு தவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி