கல்வியாளர் போரப்பாவுக்கு வால்மீகி விருது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 7, 2014

கல்வியாளர் போரப்பாவுக்கு வால்மீகி விருது

"அரசு வழங்கும், 'மகரிஷி வால்மீகி' விருதுக்கு, இந்தாண்டு கல்வி வல்லுனரும், சமூக சேவகருமான போரப்பா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்,” என, சமூகநலத் துறை அமைச்சர், ஆஞ்சநேயா தெரிவித்தார்.

நிருபர்களிடம், அவர் கூறியதாவது: 'மகரிஷி வால்மீகி' விருது தேர்வுக்காக நியமிக்கப்பட்டிருந்த, சித்தராமையா தலைமையிலான தேர்வு கமிட்டி, இந்தாண்டு, சித்ரதுர்காவின் தொட்டலகட்டா கிராமத்தைச் சேர்ந்த போரப்பாவை தேர்வு செய்துள்ளது. இவர், பல கல்வி நிறுவனங்களை அமைத்துள்ளார். இத்துடன், மாவட்டத்தின் மதகிரி நாயகர் சங்கத்தை உருவாக்கியவர். இந்த விருது, 2 லட்சம் ரூபாய் ரொக்கம், சான்றிதழை உட்கொண்டதாகும். நாளை, விதான் சவுதா மாநாட்டு அறையில் நடக்கவுள்ள, வால்மீகி ஜெயந்தி நிகழ்ச்சியில், முதல்வர் சித்தராமையா, இந்த விருதை வழங்குகிறார். வால்மீகி மடாதிபதியான, ஸ்ரீ பிரசன்னானந்த சுவாமிகள் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினரின் பொருளாதாரம், கல்வியின் நிலையை ஆய்வு செய்ய, இந்தாண்டு, 4,515 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தாண்டு, 180 கோடி ரூபாய் செலவில், 15 வால்மீகி உறைவிடப்பள்ளிகள் புதிதாக துவங்கப்படும்.

மலைவாழ் மக்களுக்கு, மழை காலத்தில், ஆறு மாதங்களுக்கான உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக, 30 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.

வன உரிமை சட்டத்தின் கீழ், 7,000 மலைவாழ் மக்களுக்கு, உரிமை பத்திரிகை கொடுக்கப்பட்டுள்ளது. போலி ஜாதி சான்றிதழ்கள் வழங்கி, வேலை வாய்ப்பு பெற்றுள்ள அதிகாரிகள் மீது, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி