பேச்சுவழக்குச்
சொற்களையும் அதற்கு இணையான இலக்கணச் சொற்களையும் கொண்ட சார்ட் ஒன்றைத்
தயார்செய்யவும். மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து, எழுதிய பேச்சு
வழக்குச் சொற்களை ஒவ்வொரு குழுவுக்கும் கொடுக்கவும்.
குழுவில்
உள்ள மாணவர்களைக் கலந்து உரையாடி, தாங்கள் வைத்துள்ள பேச்சுவழக்குச்
சொல்லுக்கு இணையான இலக்கணவழக்குச் சொல்லை எழுத வேண்டும். ஒவ்வொரு குழுவும்
தாங்கள் வைத்துள்ள பேச்சுவழக்குச் சொற்களை வாசிக்க, பிற குழுவில் அந்தச்
சொற்களுக்கு இணையாக உள்ள இலக்கணவழக்குச் சொல்லை, கரும்பலகையில் எழுத
வேண்டும்.
அதே குழுவில், பேச்சுவழக்குச் சொல்லுக்கு இணையான சொல் இருப்பின், இருவரும் எழுந்து வாசித்துக் காட்ட வேண்டும்.
மாணவர்களிடம்,
அவர்கள் பயன்படுத்தும் பேச்சுவழக்குச் சொற்களைச் சேகரித்து வரசெய்ய
வேண்டும். பிறகு, அந்தச் சொற்களை வைத்து உரை, பத்தி ஒன்றைத் தயாரிக்கச்
செய்யவும். பேச்சுவழக்குப் பத்திகளைப் பிற குழுக்களுக்கு மாற்றி, அந்தப்
பத்தியில் இடம்பெற்றுள்ள பேச்சுவழக்குச் சொற்றொடருக்கு இணையான இலக்கணவழக்கு
சொற்றொடரை எழுத வேண்டும்.
பேச்சுவழக்குச் சொற்கள்,
அதற்கு இணையான இலக்கணவழக்குச் சொற்கள், சொற்றொடர்களைப் பிழையின்றி
எழுதுதல், வாசித்தல், குழு மனப்பான்மை, உற்று நோக்கும் பண்பு ஆகியவற்றின்
அடிப்படையில் மதிப்பீடு வழங்கலாம்
Good effort
ReplyDelete