TET ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை கண்டித்து 8ந் தேதி ஆர்ப்பாட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2014

TET ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை கண்டித்து 8ந் தேதி ஆர்ப்பாட்டம்.


ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை கைவிடக்கோரி 8–ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, பொதுச்செயலாளர் கே.சாமுவேல் ராஜ், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்,

மாநிலத் தலைவர் பெ.சண்முகம், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை, பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நியமனத்தில் கடந்த 3 ஆண்டு காலமாக பெரும் குளறுபடிகள் நிகழ்ந்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்திலும், சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையிலும் பல வழக்குகள் தொடரப்பட்டு பிரச்சினை மேலும் இடியாப்ப சிக்கலாகி இருக்கிறது.பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடாமல் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. கல்வியின் தரத்தை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் ஆசிரியர்கள் இல்லாமலேயே படிக்க வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டனர்.கடுமையான போராட்டங்கள், சட்டமன்றத்தில் வலியுறுத்தல், தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையத்தின் தலையீடுகள் போன்ற காரணங்களால், ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை தமிழக அரசு பட்டியல் இனத்தவர், மாற்று திறனாளி உள்ளிட்ட இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு வழங்கி அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.இது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையை பறிப்பதாக உள்ளது. வெயிடேஜ் முறையை ரத்து செய்யக்கோரி போடப்பட்டு வழக்கில் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என தீர்ப்பளிக்கும் நீதிமன்றம், மதிப்பெண் தளர்வு வழங்கும் அரசாணை செல்லாது என்று அரசின் முடிவில் தலையிடுகிறது.இத்தகைய அணுகு முறைகள் ஆசிரியர்கள் பணி நியமனத்தை முடக்குவதோடு மாணவர்களின் கல்வியையும் பாதிக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

எனவே தமிழக முதல்– அமைச்சர் இப்பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு நெருக்கடிக்கு தீர்வு காணக்கூடிய வகையில் உயர்நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான தெளிவற்ற போக்கைக் கண்டித்தும், பட்டியல்இனத்தவர், மாற்று திறனாளி உள்ளிட்ட இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் தளர்வு தொடர்ந்திட வலியுறுத்தியும், தற்போது நடைமுறையிலுள்ள வெயிடெஜ் முறையை கைவிடக்கோரியும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஆகிய அமைப்புகளின் சார்பில் வருகிற 8–ந்தேதி சென்னை, மதுரை, கோவை, சேலம் ஆகிய மையங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும்

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

28 comments:

  1. Ivargal relaxationukku poradum podhu inikka therindha palarukku,
    Weightagekku ethiraga poradum podhu
    Kasappadhu yeno???

    ReplyDelete
  2. Naangal sindhugindra kanneerai, sindhikka vaithu vidatheergal.
    Vaalin munaiyai Vida
    Pena munaiyin
    Valimai adhigam...
    Pena munaiyin
    Valimaiyai Vida
    Engal kanneerin
    Valimai adhigam...
    Edhaiyum maatrum
    Magathaana sakthi
    Kondadhu...
    Nilavum urangum
    Maadhathil oru naal,
    Naan thoongamal
    Thavippadhu pala naal alla
    Irandu varudangal.
    Indha irandu varuda
    Ethir paarppai azhithu,
    Varungaalathil
    Irundu pona varudangalai
    Koduthu,
    Ottu motha sandhoshathai
    Keduthu vittargale!!!
    Kalvithurayil irukkum kalnenja kaarargal...

    ReplyDelete
  3. Admin sir,
    En vedhanayin varigal ivaigal,
    Ivaigalavadhu satru ULA varattum.
    Pls, don't delete.

    ReplyDelete
  4. Varandu pona en kangalukku
    Irakkam kondu - vandhadhu
    En kangailum oru Kaveri.(kanneer).
    Kodhippadaindhadhu naan mattum alla
    En kannerum thaan.

    ReplyDelete
  5. Wish you all, Happy Aayudha pooja.
    Dear all teachers,
    "A good weapon (aayudham) of a teacher is sound."
    Ungal kuralal ulagathai vidiya seiyungal.
    Ariyaamai irulai agatri,
    Arivoliyai yetra kaigal
    Thevai illai...
    Ungal kuralinaal
    Velipadum karuthukkale
    Maanavargilidaiye
    Vizhippunarvai
    Yerpaduthum...
    Ungal kuralil irukkum
    Sakthikku uyir kodungal,
    Maanavargal thaanagave
    Ungal paadathai
    Swasikka thodunguvaargal...
    Ungal kuralal, Naalai
    Ulagai aalapogum maanava
    Samuthayathin kural
    Vaiyagam engum ketka vendum.
    Yaarum idhai advice endro thavaragavo eduthu kolla vendaam. Idhu ennudaiya karuthu mattume. All the best to all kind of teachers.

    ReplyDelete
    Replies
    1. Pozhudhum vidindhathu.Aanal enakku vidiya villaiye !!! paarvai irundhum, paarvaiyatravanai vaazha vittaargale!!!

      Delete
    2. Dear red fire sir inaiku oct 2 . Mahathma gandhi piranda nal. Avaru namaku solitu ponathu onutan.
      வெ்ற்றி கிடை்க்கும் வரை பே்ாராடு. இறுதியில் வெ்ற்றி உனதே.. dont feel sir everything will be change

      Delete
    3. திரு. அட்மின் அவர்களே, 5% மதிப்பெண் குறைப்பு ரத்து என்பது, தற்போது வெளியிட இருக்கும் 669 ஆதி திராவிடர் பட்டியலுக்கும் பொருந்துமா? இல்லை மதிப்பெண் குறைப்பு மூலம் தேர்வானவர்களும், 90 மதிபென்னுக்கு மேல் பெட்ட்ரவர்களுடன் சேர்த்து வெயிட்டேஜ் முறையில் வரிசை படுத்தி தேர்வு பட்டியலை தயாரிப்பார்களா? தெளிவாக விவரிக்கவும்.

      Delete
  6. Sir is there any chance for pg 2nd list and please share me if anyone knows

    ReplyDelete
    Replies
    1. Don't expect second list because our government is not good condition now so you study next trb or tet

      Delete
  7. Good morning to all our friends, wish you happy Saraswathi pooja Aayutha pooja.

    ReplyDelete
  8. ADW list pathi ethavathu details eruka

    ReplyDelete
    Replies
    1. Hello, iam sivaprakash me also waiting for ADW list. if u have any information please post.

      Delete
  9. Annaivarukkum vanakkam
    vijaykumar chennai sir , sri sir case inum iruka sir evlo case iruku sir give us your kind information sir please

    ReplyDelete
    Replies
    1. hi iam english 67.35 oc any chance pls tell about second list 9751252530

      Delete
  10. Training சோறுமட்டுதான் போட்டாங்கோ காசு கொடுக்கல சார்.

    ReplyDelete
    Replies
    1. எங்களுக்கு காசு மட்டும் தான் கொடுத்தாங்க சோறு போடலைங்க....

      Delete
    2. Dear Mr. Sri,

      Have you joined to your school? Kindly let us know about next TET.

      Delete
    3. நல்லபடியாக சேர்ந்துவிட்டேன் நண்பரே...

      இரண்டாம் பட்டியல் வந்தவுடன் எதிர்பார்க்கலாம்...

      Delete
  11. Good morning friends ...happy. Saraswathi pooja and aayudha pooja

    ReplyDelete
  12. Happy saraswathi pooja

    ReplyDelete
  13. அரசு உதவி பெறும் பள்ளியில் காலிப்பணியிடம்
    தமிழ்நாடு அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்துள்ளது , எனவே விரைவில் உதவி பெறும் பள்ளிகள் தங்கள் பள்ளியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளனர் .
    பணம் கொடுத்து வேலைக்கு செல்ல விருப்பம் உள்ளவர்கள் தங்களின் BIO-DATA வை உங்களை எளிதில் தொடர்புகொள்ளும் Cell number உடன் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பவும் . காலிப்பணியிடம் தெரிந்தவுடன் தகவல் அனுப்புகிறேன் .

    செலுத்தவேண்டிய தொகை : சென்னை மற்றும் காஞ்சிபுரம்

    பட்டதாரி ஆசிரியர் : 7.5 லட்சம்
    முதுகலை ஆசிரியர் :8.5 லட்சம்

    மற்ற மாவட்டம் - 10 லட்சத்திற்கு மேல்
    தொடர்புக்கு :jegansaran@gmail.com,8144170981

    ReplyDelete
  14. madurai famous lawyar lajapathy sir house ku come saturday 4.10.2014 andru supreme court la tet case file pannupavargal varalam

    ReplyDelete
    Replies
    1. direct ah supreme court la case poda mudiyuma? technical a ketu sollunga?

      Delete
    2. directa pannlam.second party appel pannalam mr.chidambaram sir

      Delete
  15. BC TAMIL MAJOR WEIGHTAGE 67.50 ABOVE PLEASE CALL 8883773819

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி