TNPSC: டிசம்பர் 21ல் எழுத்து தேர்வு குரூப்-4 பதவியில்4963 காலி பணியிடம்: டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2014

TNPSC: டிசம்பர் 21ல் எழுத்து தேர்வு குரூப்-4 பதவியில்4963 காலி பணியிடம்: டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்றுவெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பதவியில் அடங்கிய

இளநிலை உதவியாளர் (பிணையம்) ( காலி பணியிடம் 39); இளநிலை உதவியாளர் (பிணையமற்றது)- 2133, தட்டச்சர்-1683, சுருக் கெழுத்து தட்டச்சர்- 331, வரித் தண்டலர் -22, வரை வாளர்-53, நில அளவர்- 702 ஆகிய மொத்தம்4963 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இன்று வெளியிட உள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். தேர்வுக்கு தேர்வாணைய இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தரப் பதிவில்பதிவு செய்த விண்ணப்பதாரர் இணையவழி விண்ணப்பத்தில் அவர்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச் சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து, இப்பதவிகளுக்கு உரிய இதர விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.நிரந்தரப் பதிவு செய்யாத விண்ணப்பதாரர் நேரடியாக முழு விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவில் பதிவு செய்தவர்கள் விண்ணப்ப கட்டணத்திலிருந்து மட்டுமே விலக்களிக்கப்படும். ஏற்கனவே, அவர்கள் வகுப்பிற்கு வழங்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில் தேர்வுக்கட்டணம் செலு த்த வேண்டும். தேர்வு கட்டணங்களை செலுத்த நவம்பர் 14ம் தேதி கடைசி நாள் ஆகும். தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 12ம் தேதி இறுதி நாள். எழுத்து தேர்வு டிசம்பர் 21ம் தேதி நடைபெறும். இத்தேர்வு மாவட்ட, தாலுகா என 244 மையங்களில் நடைபெறும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

சந்தேகங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு தேர்வு குறித்த சந்தேகங்களை 044-25332855, 044-25332833 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002ல் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

10 comments:

  1. இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கு தேர்வு செய்வதில் முரண்பாடு..

    பட்டதாரி ஆசிரியர் சிறப்பு பள்ளிகள் காலிபணியிடங்கள் மட்டும் அனைத்து பிரிவினருக்கும் அளிக்கும்போது இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மட்டும் குறிப்பிட்ட பிரிவினருக்கு அளிப்பது சரியானதா?

    மற்றவர்களுக்கு கிடைப்பதில் குறுக்கீடு செய்யவேண்டும் என்பதற்காக கூறவில்லை. எங்களில் பலர் 75.30 71.05 மதிப்பெண்களோடு வழி தெரியாமல் உள்ளனர். இப்படிபட்ட நிலையில் 669 பணியிடங்களை எல்லோருக்கும் அளித்தால் அதிக மதிப்பெண் பெற்று குறைவான மதிப்பெண் வித்தியாசத்தில் தவறவிட்ட சிலர் பணி வாய்ப்பு பெறுவர் என்பதே என் கருத்து.

    ReplyDelete
  2. Is there any chance for pg 2nd list please share me

    ReplyDelete
    Replies
    1. Mr Kiruna last week trb Ku call pannen avanga pg patri innum intimation varalanu sonnanga neengalum oru murai call panning enna achunu solunga

      Delete
  3. Yestetday we are going to TRB Office & edu. Secrt. Of TN for the purpose of releasing the minorities &ADWS selection mater.
    both officers r told the list will be publish very soon.
    edu. Sect. Told that they are ask some legal opnion with his lawyer and then the list will be publish.
    media also cover our problem in TRB office and relay
    immediately.
    pudiyatalaimurai TV...
    thanthi TV...
    polimar TV...

    WE expect good news sooooooonnnnnnn.....

    ReplyDelete
  4. 2013 GRP IV Junior Asst next phase counselling epodhu?

    ReplyDelete
  5. 2013 GRP iv counselling atten pani vacany mudindhadhal posting kedaikala. So next phase counsellingla kedaikumnu ethirparkerean. Next phase eponu yarukavdhu thagaval therindhal share panunga.

    ReplyDelete
    Replies
    1. I also waiting for group4 phase counseling

      Delete
    2. Tnpsc officela keatu pathingala. Next phase viduvangala ila stop paniduvangala. Share with me 9952422982

      Delete
  6. typist have a good chance(1600 postings) for this exam.

    ReplyDelete
  7. List released in trb website.am selected for bc&mbc welfare department

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி