TNTET:ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பிற்காக காத்திருக்கும் ... -புதியதலைமுறை தொலைக்காட்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2014

TNTET:ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பிற்காக காத்திருக்கும் ... -புதியதலைமுறை தொலைக்காட்சி


இந்தாண்டு நிறைவடைய இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகததால், தேர்விற்காக காத்திருப்பவர்களும், குறிப்பாக தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டது முதல் அது சந்தித்து வரும் சிக்கல்களின் எண்ணிக்கை எண்ணற்றதாக உள்ளது. நடத்தப்பட்ட தகுதித் தேர்விலும், அதற்கு பிறகான பணி நியமனத்திலும் தாமதங்கள் ஏற்பட்டு வந்த நிலையில்,இந்தாண்டிற்கான அறிவிப்பே இன்னும் வெளியாகாமல் உள்ளது.

2010-ல் அறிவிக்கப்பட்ட இந்த தகுதித் தேர்வு முறை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உடனடியாக அமல்படுத்தப்பட்டு தனியார் பள்ளிகளில் பணிபுரிபவர்களுக்கு ஐந்தாண்டுகள் கால அவகாசம் அளிக்கப்பட்டது.2015-ம் ஆண்டோடு அந்த அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் இந்தாண்டிற்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய கட்டாயம் பல தேர்வர்களுக்கு ஏற்பட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு வரும் இத்தேர்வு அறிவிக்கப்படாததற்கு,அதிக அளவில் தொடரப்படும் வழக்குகளும் காரணமாக கூறப்படுகிறது. 2012-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்விற்கும் அது சார்ந்த பிரச்னைகளுக்காகவும் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழக அரசு ஏராளமான வழக்குகளை சந்தித்திருக்கிறது எனக் கூறப்படுகிறது.ஆனால், இப்போது நடைபெற்று வரும் வழக்குகள் தேர்வு சார்ந்ததல்ல என்றும் நியமனம் தொடர்பாகவே இருக்கும்பட்சத்தில் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் தேர்வை நடத்தியிருக்க வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள். வழக்குகள் தவிர பல்வேறு போராட்டங்களும் நடந்த வண்ணம் உள்ளன.

ஆசிரியர் தேர்வு வாரியத் தரப்பில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான விளக்கம் எதுவும் அளிப்படவில்லை. எனினும், அடுத்த மாதத்திற்குள் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

16 comments:

 1. திரு, விஜயகுமார் சார், ஆ.தி. பள்ளி நியமனத்திற்கான வழக்கு பற்றி விளக்கம் தாருங்கள்,
  அந்த வழக்கு எப்பொழுது விசாரணைக்கு வருகிறது, எப்பொழுது தீர்ப்பு வரும் .

  ReplyDelete
  Replies
  1. My dear akilan sir,thank u very much for ur comment.from morning onwards i am waiting for ur comment sir...we wait up to monday...God will help us....

   Delete
  2. Mr Akilan, thanking u very much for ur valuable comment.we will wait upto monday.

   Delete
 2. Science SC with TET Pass...
  PG Commerce SC
  Pls Contact
  /raj - 9444588966
  thiru - 9843951505

  ReplyDelete
 3. Friends, Please Clarify my doubt.. Nan Backlog vacancy-il select agi ullen, athanal nan BV places than select seyya venduma or Current vaccancy places select pannalama?

  ReplyDelete
 4. Mbc and bc kku chance frm ADW LIST PLZ CLEAR ANY ONE

  ReplyDelete
 5. 12,000 Postingla poietu santa pota vendiyathu tana, adw list sc, sca maittum tan athalayum eppadi problem panringa.

  ReplyDelete
  Replies
  1. hai dear friends good evening today i spoke to mr ARIVOZHI SIR he is one of the

   director of trb he told our adw list delayed due to mr ramar case , and that case comming

   monday come to court so that day may be remove stayorder , so we will wait upto monday

   monday kandippa vara chance erukku because our ADW department process going on

   Delete
 6. FRIENDS pls clarify my dout, 2nd listla 1026kku ,501 than pottirukkanga.( balance)meethi

  appo poduvanga? balance 3 corporation schools vacant irukka?

  ReplyDelete
 7. monday kandipa adw list varuma sir

  ReplyDelete
 8. ஆசிரியர் தகுதித் தேர்வு வைக்க வேண்டாம்ன ஆரம்பத்திலே இருந்து போராட்டம் செய்தப்போ யாரும் கேட்கல. இப்போ ஆசிரியர் தகுததி தேர்வு அறிவிப்பே கொடுக்க முடியாம திண்டாடுறீங்க. இதுக்குத்தான் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்டையிலே இருந்திருந்தா யாருக்கும் எந்த பிரச்சினையும் வந்திருக்காது. தகுதித்தேர்வு வைத்து தேர்ச்சி பெற்றவங்க வேலைக்குப் போறாங்க. தேர்ச்சி பெறாதவங்களுக்கு தகுதித் தேர்வ வைக்க முடியாம திணருறீங்க. என்ன நியாயம். இந்த வருடம் தகுதி தேர்வு அறிவிப்பே இல்லை. உங்க வேலையே உங்களாள ஒழுங்கா செய்ய முடியல. எத்தனை அதிகாரிகள் இருக்கிறாங்க. ஒருத்தங்களுமே ஒழுங்கா யோசிக்க மாட்டீங்களா. நாங்கள்ளால் எத்தனை காலம் இப்படி உங்களால கஷ்டப்படுறது. சட்டம் போட்டா உங்களாள அதைப் பின்பற்ற முடியல. பின்ன ஏன் இப்படி தேர்ச்சி பெறாதவங்க, அடுத்த தகுதி தேர்வு எப்போ வரும்னு காத்து எமாந்துட்டு போறாங்க. நீங்க இந்த வருடம் தகுதி தேர்வு வேண்டாம் றீ.ஆர்.பி அறிவிப்ப. ரொம்ப சூப்பர்.

  ReplyDelete
 9. stay order release ana kandippa vanthudum

  ReplyDelete
 10. வணக்கம் அகிலன் சார்.
  ராமர் கேஸ் நகைப்பிற்கு உாியது.
  எந்த அரசாங்கமும் ,சமூக நீதி அறிந்தவரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
  அந்த கேலிக்கூத்தான மனு முதல்நாள் விசாரணையிலேயே நிராகரிக்கப்பட்டது.

  நான் விசாரித்ததில்5:1 என்ற முறையில் பட்டியல் வௌிவரப்போகிறது.

  ராமருக்கு(ராவணன்) பதில் அனுப்பதான் கால அவகாசம்.வேறொன்றுமில்லை

  ReplyDelete
 11. 5:1 puriyala? clear adidiravidan sir

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி