100 சதவீத தேர்ச்சிக்கு உழைக்காதஆசிரியர்கள் மீதுநடவடிக்கை:இணை இயக்குனர் எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2014

100 சதவீத தேர்ச்சிக்கு உழைக்காதஆசிரியர்கள் மீதுநடவடிக்கை:இணை இயக்குனர் எச்சரிக்கை


“பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ல் 100 சதவீத வெற்றிக்கு உழைக்காத ஆசிரியர்கள்மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை தயங்காது,” என மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர் கார்மேகம் எச்சரித்துள்ளார்.
கடந்த கல்வியாண்டில் பத்து மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 80 சதவீதம்அதற்கு குறைவான தேர்ச்சியை பெற்ற அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கானஆய்வுக்கூட்டம் காரைக்குடியில் நடந்தது. முதுகலை ஆசிரியர்கள் ஆய்வுகூட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர் கார்மேகம் ஆலோசனை வழங்கினார்.

அவர் பேசியதாவது:
பிளஸ் 2 ல் 80 சதவீத தேர்ச்சி என்பது போதாது.100 சதவீத தேர்ச்சியை பெற ஆசிரியர்கள் கடுமையாக உழைக்கவேண்டும். படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். கல்வித் துறை ஆலோசனைகளை பெற வேண்டும். அடுத்த பொதுத் தேர்விற்குள் இன்னொரு முறை ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும். இதில், தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும் இதன் பின்னரும் 100 சதவீத தேர்ச்சியை எட்டாத பள்ளிகளில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை தயங்காது, என்றார்.

2 comments:

  1. ஒரு மாணவனின் கல்வி அறிவு என்பது, 10ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு ஆசிரியர்களை பொருத்து மட்டும் இல்லை என்பதை கல்வி துறைக்கு தெரியாதா?? மற்ற வகுப்பு ஆசிரியர்கள் சரியாக போதிக்கவில்லை என்றால் 10ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு ஆசிரியர்களை மாயஜால வித்தை தெரிந்தவர்களா தான் தேர்வு செய்ய வேண்டும்.

    அடிப்படை பிரச்சனைகளை கண்டறிந்து கலையாமல், மேலோட்டமாக எடுக்கும் எந்த முடிவும் பயன் தராது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி