அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,807 முதுநிலை பட்டதாரிஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களை நிரப்ப டிஆர்பிஅறிவித்துள்ளது. அதற்கான போட்டித் தேர்வு ஜனவரி 10ம் தேதி நடக்கிறது.
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசு மேனிலைப் பள்ளிகளில் 2013-14 மற்றும் 2014-15ம் ஆண்டுகளில் 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலி ஏற்பட்டுள்ளன. இந்த இடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் 10ம் தேதி முதல்வினியோகிக்கப்படும். போட்டித் தேர்வு ஜனவரி 10ம் தேதி நடக்கிறது.
தமிழ் பாட ஆசிரியர்கள் 277,
ஆங்கிலம் 209,
கணக்கு 222
இயற்பியல் 189,
வேதியியல் 189,
தாவரவியல் 95,
விலங்கியல் 89,
வரலாறு 198,
பொருளியல் 177,
வணிகவியல் 135,
உடற்கல்வி இயக்குநர் 27 ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படும்.
விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் 10ம் தேதி முதல் பெற்று பூர்த்தி செய்து, அதே அலுவலகங்களில் 26ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் 50. போட்டித் தேர்வுக்கு 500 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி எஸ்டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள்250 செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பொறுத்தவரை நேரடியாகவோ, தபால் மூலமோ டிஆர்பி அலுவலகத்துக்கு அனுப்பும் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
டிஆர்பி வெளியிட்ட அறிவிப்பின் தொடக்கத்தில் போட்டித் தேர்வு ஜனவரி 10ம் தேதி நடக்கும் என்று அறிவித்துள்ளது. ஆனால்,அறிவிப்பின் கீழ் உள்ள விளக்கத்தில் ஜனவரி 4ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதுநிலை பட்டதாரிகள் குழப்பம் அடைந்தனர்.
இதுபற்றி, டிஆர்பி அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது, போட்டித் தேர்வு ஜனவரி 10ம் தேதிதான் நடக்கிறது.4ம்தேதி என்று உள்ளது தவறு என்றும், அதுகுறித்த திருத்தம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி