ராஜேந்திர சோழன் 1000-ஆவது ஆண்டு தொடக்கம்: நவம்பர் 9-இல் ஆர்.எஸ்.எஸ். பேரணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2014

ராஜேந்திர சோழன் 1000-ஆவது ஆண்டு தொடக்கம்: நவம்பர் 9-இல் ஆர்.எஸ்.எஸ். பேரணி

ராஜேந்திரசோழன் முடிசூட்டிக்கொண்டதன் 1000-ஆவது ஆண்டை முன்னிட்டு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் வருகிற 9-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பேரணி நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநில செய்தித் தொடர்பாளர் என்.சடகோபன் செய்தியாளர்களிடம் கூறியது:

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில இந்திய செயற்குழுக் கூட்டம் லக்னெüவில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அதில் ராஜேந்திரசோழன் முடிசூட்டிய 1000-ஆவது ஆண்டை நாடெங்கிலும் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் நவம்பர் 9-ஆம் தேதி தமிழகமெங்கும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் பேரணி நடைபெற உள்ளது.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகிலிருந்து வரும் 9-ஆம் தேதி பேரணி தொடங்கும். இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோயில்கள் இன்றும் கம்பீரமாக நிலைத்து நிற்கின்றன.

சீனாவுடன் ராஜிய உறவுகளை மேம்படுத்த வேண்டி அந்தக் காலக்கட்டத்திலேயே துôதரை நியமனம் செய்துள்ளார் அவர்.

அவரது பெருமைகள், நிர்வாகத்திறன், ஆட்சியின் சிறப்பம்சங்களை, கருத்தரங்குகள், சொற்பொழிவுகள், மாநாடுகளின் மூலம் நாடு முழுவதும் எடுத்துரைக்க ஆர்.எஸ்.எஸ். செயற்குழு முடிவு செய்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி