அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,800 முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), விரைவில் போட்டித் தேர்வு அறிவிப்பை வெளியிட உள்ளது.
தரம் உயர்த்தப்பட்ட, 100 மேல்நிலைப் பள்ளிகளில், 900 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், 450 ஆசிரியர், பதவி உயர்வு மூலம் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டனர். மீதமுள்ள, 450 பணியிடங்களை, நேரடி போட்டித் தேர்வு மூலம் நிரப்பிட, தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. மேலும், 2013 - 14ம் கல்வியாண்டில் ஏற்பட்ட காலிப் பணியிடம் உட்பட, மொத்தம் 1,800 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தேர்வு நடத்தப்பட உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை, டி.ஆர்.பி., ஓரிரு நாளில் வெளியிடும். போட்டித் தேர்வு, வரும் பிப்ரவரி அல்லது மார்ச்சில் நடக்கும். தேர்வு செய்யப்படுவோரை, அடுத்த கல்வியாண்டில் பணி நியமனம் செய்திட, பள்ளி கல்வித் துறை முடிவு செய்து உள்ளது
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி