1807 முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: போட்டித்தேர்வுக்கு 2 லட்சம் விண்ணப்பம் வினியோகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 10, 2014

1807 முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: போட்டித்தேர்வுக்கு 2 லட்சம் விண்ணப்பம் வினியோகம்


சென்னை, நவ. 10–
அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு 1807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும், உடற்கல்வி இயக்குனர்களும் (கிரேடு–1) போட்டி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் இன்று(10–ந்தேதி) முதல் 21–ந்தேதி வரை விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை மாவட்டத்தில் மட்டும் முதன்மை கல்வி அதிகாரிக்கு பதிலாக நந்தனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் (கோட்டூர்புரம் பாலம் அருகில்) விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகிறது.விண்ணப்பங்கள் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை பெறலாம். விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.50. தேர்வு கட்டணம் ரூ.500.எஸ்.சி.,எஸ்.டி. வகுப்பினருக்கும், மாற்று திறனாளிகளுக்கும் ரூ.250 விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள செலானை பயன்படுத்தி பாரத் ஸ்டேட் வங்கியிலோ,இந்தியன் வங்கியிலோ தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்.பூர்த்தி செய்து விண்ணப்பித்த விண்ணப்பம் வாங்கிய இடத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு அனுப்பக்கூடாது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:–1807 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான விண்ணப்ப வினியோகம் சென்னை உள்பட 32 மாவட்டங்களிலும் இன்று தொடங்கியுள்ளது. விண்ணப்பபடிவங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.2 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில்சமர்ப்பிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.சென்னையில் விண்ணப்ப படிவம் வாங்க நந்தனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாங்குவதற்கு கூட்டம் குவிந்தது. ஆண், பெண் பட்டதாரிகள் மட்டுமின்றி பெற்றோர்களும் விண்ணப்பம் வாங்க ஆர்வத்துடன் வந்திருந்தனர். சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா விண்ணப்பம் முறையாக வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தார்.

7 comments:

  1. Idhellam crct ah pannuvinga but qstn crct ah ketkamatinga, thattupadu eppadi varum irukum 1000 vcnt ku 2lks cndts exam ezudha poranga so
    ungaluku aplctn nd DD paise engo pogudhu

    ReplyDelete
  2. hai dear brothers & sisters and my friends good morning

    ReplyDelete
  3. Frds good morning.coming 13.11.2014 counselling for minority language bt teacher.

    ReplyDelete
  4. What about BC and MBC counselling friends?

    ReplyDelete
  5. hai friends good morning

    BT minority counsling 13.11.14 so

    kadaisila enji erupathu nam than
    gendral govt sc/st than kalvi tharathil mikavum
    pin thanki erukirathu endru puthiya thitdankala
    kondu varuthu

    but tn govt sc/ st padikka vaikka entha muyarchiyum pannala

    last time madurai court stay kudukkayila
    students kalvitharam pathikka padum nu seekaaram stay nekinarkal

    but adw la 2007 lenthu posting podala so 669 vacant
    so neraiya school la teacher ella
    appo adw school la padikkaravankalm students ellaya

    evanakale nammala padikka vidamattanka
    apparam eligibility exam vaipanka 5 th to 10 th mark lenthu papanka
    namma teacher ellama kasta pattu padichu mark eduthalum

    atha eduthukama court la case eruku
    case mudinchthm podurenu solvanka

    enna kodumai ethu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி