அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் விண்ணப்பிக்க டிச.1 கடைசி தேதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2014

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் விண்ணப்பிக்க டிச.1 கடைசி தேதி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் மொத்தம் சுமார் 3 லட்சம் பேர் பயிலுகின்றனர். இந்த கல்வி ஆண்டில் மாணவ, மாணவியர்கள் சேர்ந்து பயில விண்ணப்பிக்க டிச.1-ம் தேதி கடைசி நாளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 259 படிப்புகள்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேவையை கருதி 1979-ல் தொலைதூரக்கல்வி இயக்ககம் தொடங்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக்கல்வி மையத்தில் புதுதில்லி தொலைதூரக்கல்வி கவுன்சில் (Distance Education Council, New Delhi) அனுமதி பெற்ற மொத்தம் 259 படிப்புகள் நடத்தப்படுகின்றன. மருத்துவம் படிப்புகள் 12-ம், மருந்தியல் படிப்புகள் 2-ம். வேளாண் படிப்புகள்- 9-ம், பொறியியல் படிப்புகள் 53-ம் மற்றும் கலை, அறிவியல், தமிழ், இசை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த பல்வேறு இளங்கலை, முதுகலை, டிப்ளமா, முதுநிலை டிப்ளமா படிப்புகள் நடத்தப்படுகின்றன.

3லட்சம் பேர் பயிலுகின்றனர்: தொலைதூரக்கல்வி மையத்தில் சுமார் 3 லட்சத்து 1940 பேர் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 95 பேர் அனுமதி சேர்க்கை செய்துள்ளனர். இந்த ஆண்டு சுமார் 1.50 லட்சம் அனுமதி சேர்க்கை செய்வார்கள் என எதிபார்க்கப்படுகிறது.

கல்வி உதவித்தொகை: தொலைதூரக்கல்வி மையத்தில் தொழில்படிப்பு பயிலும் எஸ்சி., எஸ்டி மாணவர்களுக்கும், பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் தமிழகஅரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெற்றுத்தரப்படுகிறது. இந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பிக்கும் தேசி டிச.1-ம் தேதி கடைசி நாளாகும் என அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக இயக்குநர் முனைவர் ஆர்.எம்.சந்திரசேகரன் தெரிவித்தார்.

9 comments:

  1. Replies
    1. Adw case enna sir aachu???

      Delete
    2. Athu ethum aagala nanpa.... namathan paithiyam aagurom

      Delete
  2. Please anybody tell me about pg list and counseling

    ReplyDelete
  3. Please anybody tell me about pg list and counseling

    ReplyDelete
  4. Hai frnds, I'm sc male my wetg 68.33 enaku chance iruka solliga frnds

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Hello Alex sir, why you said tet second list not avaliable. So sad .

    ReplyDelete
  7. முதுகலை தமிழாசிரியர்: முயன்று படித்தால் முதல் வெற்றி நமதே!

    முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்
    வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சி வழங்கப்படும். சிறப்பு வசதியாக சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகு வாரியாக சுமார் 30 தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.

    சென்ற 2013 முதுகலை தமிழாசிரியர் -தேர்வில் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில்பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாக படித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாரகுவோருக்கு இத்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும்.

    தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும்.தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
    தற்போது இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
    .அவர்களுக்கான வினாத்தாட்கள் உடனுக்குடன் அனுப்பப்பட்டு வருகின்றன. தேர்வுக்கு மிகக்குறைந்த நாள்களே உள்ளதால் திட்டமிட்டு படித்து வெற்றிக்கனியை பறியுங்கள்!

    மேலும் விவரங்களுக்கு
    வெற்றி- 7373967635

    பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்பட்டுஇதுவரை 7 தேர்வுகள் பாடத்திட்டத்தையொட்டி அலகு வாரியாக நடத்தப்பட்டுள்ளன.

    இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைந்து வருவோர் பலர் அவர்களில் சிலரின் கருத்துக்கள்....

    ஞானப்பிரகாசம், காஞ்சிபுரம் 8807188270
    வழங்கப்பட்ட பாடப்பொருள் மிகச்சிறப்பாக உள்ளது.குறிப்பாக இலக்கிய திறனாய்வு பகுதியில் அமைப்பியல் , பின்னமைப்பியல் ,நவினத்துவம் பற்றிய செய்திகள் வேறு எந்த நூல்களிலும் இல்லாத புதிய தகவல்கள்

    இந்திரா, சிதம்பரம்
    ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் அனைத்துப்பகுதி தொகுத்து வழங்கியுள்ளது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

    நிஹாத் பெங்களூர்.
    பெங்களூரில் உள்ள எனக்கு நேரடி பயிற்சிக்கு வாய்ப்பில்லையே எனும் குறையை போக்கிவிட்டது தங்களின் பாடப்பொருளும், வினாத்தாள்களும்.

    ரிஹானா , மேலூர் நெல்லை
    நான் திட்டமிட்டு பதிப்பதற்கும்,படித்தபின் மதிப்பீடு செய்வதற்கும் உங்கள் வினாத்தாள்கள் பயனுடயதாக உள்ளது.வெற்றி பெறமுடியும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

    தாமரை, திருவண்ணாமலை

    தருமபுரிக்கு நேரில் வந்து பயிற்சி பெறமுடியாத சூழலில்.எனது ஊரிலேயெ பயிற்சியில் சேர்ந்துள்ளேன். உங்கள் பயிற்சியில் அளிக்கப்படும் வினாக்கள் மிகுந்த தரமுள்ளதாக உள்ளது.அதன் மூலம் நான் எப்படி படித்துள்ளேன் என நானே மதிப்பீடு செய்துகொள்கிறேன் பயிற்சி எனக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது

    மஞ்சுளா, மயிலாடுதுறை
    நான் முதன்முதலாக இப்போட்டித்தேர்வு எழுதவுள்ளேன்.பல புத்தகங்களைத் தேடி படிக்கவேண்டும் எனும் நிலயைமாற்றி தேவையான கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்து அளித்திருப்பது சிறப்பு.தங்களின் வினாத்தாள் எனது இலக்கை நோக்கிய பயணத்தின் அளவுகோலாக உள்ளது.
    நன்றி

    அருள்,திட்டக்குடி 9842197488
    சேர்ந்த மறுநாளே எனக்கு உடணடியாக study meteriyal அனுப்பியமைக்கு நன்றி.
    இபோதே திட்டமிட்டு அலகுவாரியான தேர்வுக்கு தயாராவதற்கு உங்கள் பாடப்பொருள் மிகவும் உபயோகமாக உள்ளது.



    ஜெ.செந்தாமரைக்கண்ணன், விருத்தாசலம்
    தங்களின் பாடப்பொருளுடன் வினா-விடை வடிவில் தமிழ் இலக்கிய வரலாற்றினை தொகுத்தளிதிருப்பது எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது.இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வினாக்கள் அடங்கிய அத்தொகுப்பு வெற்றிக்கு வழி வகுக்கும்

    நீங்களும் வெற்றியாளராக வேண்டுமா?
    கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேண் எனும் மன உறுதியுடையவர்கள் தொடர்பு கொள்க.

    வெற்றி- 7373967635

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி