2012ம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்வுக்கு இன்னும் பணி நியமனம் செய்யப்படாததைக் கண்டித்து தேர்வர்கள் கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மூவாயிரத்து 589 கூட்டுறவு வங்கி உதவியாளர்கள்பண்யிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்விற்கான இறுதி முடிவுகள் வெளியாவதில் தாமதமாவதால் கூட்டுறவு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பல்வேறு பிரச்னைகளுக்கு பிறகு, தேர்வு முடிந்து மூன்று மாதங்களுக்குள் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த காலக்கெடு நவம்பர் 15ம் தேதி முடிவடைந்தும் பணி நியமனம் செய்யப்படாததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தேர்வர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து, கூடுதல் பதிவாளரிடம் பேசியபோது, டிசம்பர் 28ம் தேதிக்குள் பணி நியமனம் செய்யப்படும் என உறுதியளித்ததாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி