தெற்கு ரயில்வேயில் குரூப் - டி பணி65 ஆயிரம் பேர்தேர்வு எழுதினர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2014

தெற்கு ரயில்வேயில் குரூப் - டி பணி65 ஆயிரம் பேர்தேர்வு எழுதினர்


தெற்கு ரயில்வேயில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில்,நேற்று நடந்த குரூப் - டி தேர்வில், 65 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள, 5,450 நான்காம் நிலை பணியிடங்களை (குரூப் - டி) நிரப்புவதற்கான அறிவிப்பு, 2013 ஆகஸ்டில் வெளியிடப்பட்டது.தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை, சேலம், திருச்சி, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் என, ஆறு ரயில்வே கோட்டங்களில் ரயில் பாதை பராமரிப்பாளர், கண்காணிப்பாளர், மின் உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியானவர்களை, சென்னையில் உள்ள ரயில்வே தேர்வுக் குழுமம் (ஆர்.ஆர்.சி.,) தேர்வு செய்கிறது.

இந்த பணிகளுக்கு, தமிழகம், கேரளா, உ.பி., பீகார், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து, 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான தேர்வு, நவ., 2, 9, 16, 23, 30ம் தேதிகளில் நடக்கிறது. நேற்று தேர்வு எழுத, 2.20 லட்சம் பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். சென்னை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட கோட்டங்களில், 225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும், 96 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில், வட மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தேர்வுக்காக, 2.20 லட்சம் பேர் அழைக்கப்பட்டிருந்த போதிலும், 30 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுத வந்தனர். 65 ஆயிரம் பேர்தேர்வு எழுதியுள்ளனர்' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி