இந்தியர்கள் வாழ்க்கையில் ஸ்மார்ட் போன் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகிறது? உலக அளவில் பார்க்கும்போது, ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் இந்தியர்களில் 95 சதவீதம் பேர் அதை மிகவும் முக்கியமாகக் கருதுவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
பயண இணையதளமான எக்ஸ்பீடியா சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு,இந்தியர்கள் ஸ்மார்ட் போனைத் தங்கள் தினசரி வாழ்க்கையின் முக்கிய அங்கமாகக் கருதுவதாக தெரிவிக்கிறது. 25 நாடுகளைச் சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட 8,856 ஊழியர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
உலக அளவில் இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயனாளிகள் அதிகம் இருப்பதாகவும், உலகிலேயே இந்தியர்கள் தான் விடுமுறை காலத்திலும் ஸ்மார்ட் போனை எடுத்துசெல்பவர்களில் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கிறது இந்த ஆய்வு. ஆச்சரியப்படும் வகையில் கூகுள் கிளாஸ் பயனாளிகளும் இந்தியாவில் அதிகம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பயண நிறுவனம் நடத்திய ஆய்வு என்பதால், இந்தியர்கள் ஸ்மார்ட் போன் மூலம் பயணங்களைத் திட்டமிடுவது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி