வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க அரசு அறிவிப்பு வெளியாகுமா: 8 லட்சம் பேர் காத்திருப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 15, 2014

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க அரசு அறிவிப்பு வெளியாகுமா: 8 லட்சம் பேர் காத்திருப்பு


வேலைவாய்ப்பு பதிவு விடுபட்டோர், பதிவை புதுப்பிக்க அரசு அறிவிப்பு எப்போது வெளியாகும் என, 8 லட்சம் பேருக்கு மேல் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் 85 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கல்வித் தகுதியை பதிவு செய்துவிட்டு, நியமனத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இவர்கள் தங்கள் பதிவை புதுப்பிக்க வேண்டும்.

புதுப்பிக்க வேண்டிய நாளை தவறவிட்டால், 18 மாதங்களுக்குள் மீண்டும் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். அதற்கு மேல் ஆகிவிட்டால், ஆண்டுதோறும் சலுகை உத்தரவை அரசு அறிவிக்கும் போது பதிவை மீண்டும் புதுப்பிக்கலாம். 2011 - 2013ம் ஆண்டுகளில் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு இப்படியொரு வாய்ப்பு வழங்கப்படும் என கடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் அது இதுவரைஅரசாணையாக வெளியிடப் படவில்லை. அந்த அறிவிப்பை எதிர்பார்த்து தமிழகத்தில் 10 சதவீதம் பேர் (8 லட்சத்திற்கும் மேல்) காத்திருக்கின்றனர். பதிவு தகுதிஇருந்தால்தான் பணியில் சேர முடியும் என்பதால், ஆசிரியர் தேர்வு வாரியம் உட்பட பல போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கக் கூட தயங்கிய நிலையில் பலர் உள்ளனர்.ஒரு அறிவிப்பில் பல லட்சம் பேர் பயனடைவர். அரசுக்கு எவ்விதத்திலும் நிதியிழப்பு வராது, எனவே உடனே வாய்ப்பளிக்க வேண்டும் என, பதிவுதாரர்கள் தெரிவித்தனர்.

2 comments:

  1. என்னுடைய புத்தகம் எனது வெற்றிக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டது இது எந்த கடையிலும் கிடைக்காது புத்தகம் முழுவதும் என்னுடைய உழைப்பு மட்டுமே இருக்கும் எனது தொடர்பு எண் 9976715765

    ReplyDelete
  2. Do u know anything about adw list for paper 1?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி