'மக்கள் தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும்' என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை, சுப்ரீம் கோர்ட் நேற்று ரத்து செய்தது.
'ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதா, வேண்டாமா என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு; அதில் எந்த கோர்ட்டும் தலையிட முடியாது' என,உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், '2010ல் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, அதிகாரத்தை மீறிய செயல்; அத்தகைய தீர்ப்பை வெளியிட சென்னை கோர்ட்டுக்கு அனுமதியில்லை' என, நேற்று உத்தரவிட்டது. இதன் மூலம் ஜாதிவாரி கணக்கெடுப்பு இப்போதைக்கு கிடையாது என்பது உறுதியாகியுள்ளது.கடந்த, 2012ல் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு, சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்ததற்கு தடை கோரி, மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் மனு போட்டிருந்தது.
அந்த மனு மீதான விவாதங்கள் முடிந்த நிலையில், நேற்று, இந்த வழக்கு குறித்த இறுதி தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித், ஆர்.நாரிமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அளித்தது.அந்ததீர்ப்பில், 'மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது சட்ட விரோதமானது. மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு இடம் இருக்கிறதா, இல்லையா என்பதை ஆராயாமல், சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது, அதன் அதிகாரத்தை மீறிய செயல். எனவே, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு அனுமதி வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதன்மூலம், ஜாதிவாரி கணக்கெடுப்பு, நாடு முழுவதும் இப்போதைக்கு கிடையாது என்பதுஉறுதியாகியுள்ளது.மக்களிடையே பிளவை உண்டாக்கும்: அன்றே சொன்னார் சிதம்பரம்:கடந்த 2011ல், மத்திய அரசு, மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும்போது, அதனுடன் சேர்த்து ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி, ஓராண்டு முன்னதாகவே, 2010ம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில், கிருஷ்ணமூர்த்தி என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்திருந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், 2011ல், மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் என, உத்தரவிட்டனர்.இதற்கிடையே, மத்திய அரசின், 2010ம் ஆண்டின் உத்தரவின்படி, வீடுகள் குறித்த கணக்கெடுப்பு துவங்கி, அது, 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடந்து கொண்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக, 2012ல், சமூக பொருளாதார மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடவடிக்கைகள் தமிழகத்தில் துவங்கின.அப்போது, ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தடை கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், 2012ம் ஆண்டு, ஐக்கிய முற்போக்குகூட்டணி அரசில், உள்துறை அமைச்சராக சிதம்பரம் இருந்த போது, அவருக்கு கீழ், மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையும் இருந்தது. அப்போது, 'சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி, மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது' என தெரிவித்து, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசின் சார்பில்மனு தாக்கல் செய்யப்பட்டது.'ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, சென்னைஉயர்நீதி மன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு, மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடுவதைப் போல உள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது, மக்களிடையே பிளவை உருவாக்கும்' என, மத்திய அரசு வாதிட்டது.
இதையடுத்து, ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு, சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது.பின், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்த, வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, தன்னையும், இந்த வழக்கில் மனுதாரராக சேர்க்க வேண்டுமென்றும், ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியமானது என்றும் கூறி, சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை வைத்தார்.இந்த மனு மீது தான் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
Jaathi vaari kanakku vendaamna.....?
ReplyDeleteJaathi vaari ida othikeedum vendamu thane artham...!
Inimel only .........maattume mathipu..