பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2014

பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்


உச்சநீதி மன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தக்கோரி ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் சென்னையில் நேற்று உண்ணா விரதம் இருந்தனர்.
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடந்த உண்ணாவிரதத்தில் பல்வேறு பட்டதாரி சங்கங்கள் பங்கேற்றன.புவியியல் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராம தாஸ் தலைமை தாங்கினார். வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர் சங்க மாநில தலைவர் ராமு முன்னிலை வகித்தார்.

உண்ணாவிரதத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகளைவருமாறு:
சான்று சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதி மன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும்.உயர்நீதி மன்ற, உச்சநீதி மன்ற உத்தரவுகளின் படி நடைமுறை விதி அரசாணைகளில் உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆர்எம்எஸ்ஏ திட்டப் பணியிடங்களில் 2011&2012ம் ஆண்டுக்கான பணியிடங்களை பழைய நடைமுறையின் கீழ் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

பின்னர், இந்த கோரிக்கைகள் அனைத்தை யும் மனுவாக தயாரித்து தமிழக முதல்வர், பள்ளிக் கல்வி அமைச்சர், பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் ஆகியோருக்கு ஒருங்கிணைந்த பட்டதாரிகள் நேரில் சென்றுகொடுத்தனர்.

2 comments:

  1. Thank You Very Much for Employment Seniority BT CV Persons Appointment Pending in High Court News Registered in "Kalvi Seithi"

    ReplyDelete
  2. God only help us. I send letter to CM cell 3 times. Their reply is that govt policy can not changed so ur request is REjected.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி