பகுதி நேர ஆசிரியர்களை பந்தாடும் தமிழக அரசு சம்பள நிலுவைதொகை வழங்க நிதி இல்லையாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2014

பகுதி நேர ஆசிரியர்களை பந்தாடும் தமிழக அரசு சம்பள நிலுவைதொகை வழங்க நிதி இல்லையாம்.


பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு என கடந்த பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கண்டு கொள்ளப்படவில்லை. ஆசிரியர்களின் தொடர்ச்சியான முயற்சியால், கடந்த வாரம் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், அதற்கான நிலுவை தொகையை நிறுத்தி வைத்து, திட்ட இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நடப்பு மாதம் மட்டும் ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள அறுிவுறுத்தப்பட்டுள்ளது.

ssa திட்டத்திற்காக, நடப்பு கல்வியாண்டில், மத்திய அரசு 2,400 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. அதிலிருந்து தான் பகுதி நேர ssa ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது. இந்நிலையி்ல் நிதி நிலையை மேற்கோள் காட்டி, நிலுவை தொகையை நிறுத்தி வைப்பது எந்தவிதத்தில் நியாயம்.ssaவுக்கு மத்திய அரசு ஒதுக்கிய 2,400 கோடி என்ன ஆனது. எங்கே போனது. விலையில்லா ஆடு, மாடு, மடிக்கணினி, மிக்சி கிரைண்டர், மின்விசிறி என வழங்க மட்டும் அரசின் நிதி நிலை சிறப்பாக உள்ளதா?பணி நிரந்தரம் இப்போதைக்கு இல்லை என்றாலும், முன்தேதியிட்ட ஊதிய உயர்வு காரணமாக, சற்றே நிம்மதியடைந்திருந்த பகுதி நேர ஆசிரியர்களின் சந்தோஷம், ஒரே வாரத்தில் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

16,500 பகுதி நேர ஆசிரியர்களையும் சேர்த்து தான் 54,000 ஆசிரியர்களை ஒரே ஆண்டில் நியமனம் செய்ததாக, சட்டசபையில் மார்தட்டிக்கொண்டது இந்த அரசு. ஆனால், தங்களின் ஆட்சிக்காலத்தை பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யாமலே ஓட்டிவிட நினைப்பதும், அவர்களுக்காக, மத்திய அரசு ஒதுக்கிய நிதியை வழங்காமல் புறக்கணிப்பதும்,......

FROM FB : ELUMALAI PANDIYAN

3 comments:

 1. பொறுமை கடலினும் பெரிது!!!!!!!!!!!

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. வறுமை அதை விட கொடியது.... சுந்தரம் அவர்களே...

  இந்த தகவலை வெளியிட்ட கல்வி செய்தி தளத்திற்கு நன்றி.
  –ஏழுமலை பாண்டியன்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி