திருவள்ளுவர் பிறந்த நாள் தேசிய அளவில் கொண்டாடப்படும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2014

திருவள்ளுவர் பிறந்த நாள் தேசிய அளவில் கொண்டாடப்படும்

தமிழ் மொழிக்கு, தேசிய அளவில் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், உத்தரகண்டைச் சேர்ந்த, பா.ஜ., - எம்.பி.,யான தருண்விஜய், பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், திருவள்ளுவரின் பிறந்த நாளை, தேசிய அளவில், மத்திய அரசே முன்வந்து கொண்டாட வேண்டுமென, வலியுறுத்தி பேசுவதற்காக, ராஜ்யசபா தலைவரிடம், அனுமதி கேட்டு இருந்தார். நேற்று அவருக்கு, அனுமதி கிடைத்தது.


அதில் தருண்விஜய் பேசியதாவது:

இந்தியா என்பது, ஏதோ துளசிதாசரும், வால்மீகியும் மட்டும் தான், என்ற நிலை உள்ளது. உண்மை அதுவல்ல. திருவள்ளுவர், கண்ணகி போன்றவர்களையும், உள்ளடக்கியது தான் இந்தியா. நான் இமயமலைச் சேர்ந்தவன் என்றாலும், தமிழ் அன்னைக்கு தான், என் முதல் வணக்கம். 'அகர முதல எழுத்தெல்லாம், ஆதிபகவன் முதற்றே உலகு' என்ற, கற்பனைக்கு எட்டாத தத்துவத்தைச் சொன்ன, மாபெரும் தத்துவ ஞானியான, திருவள்ளுவரைப் பற்றி, வட மாநில மக்கள், அனைவருக்கும் தெரிய வைக்க வேண்டும். அவரது வாழ்க்கை வரலாறு குறித்து, வட மாநிலங்களில் பாடப் புத்தகங்களிலும், இடம்பெறச் செய்ய வேண்டும்.

இந்தியாவில் கன்னடம், தெலுங்கு, வங்கம் என, எத்தனையோ மொழிகள் இருந்தாலும், அத்தனைக்கும், தலையாய மொழி, தமிழ். உலகம் முழுவதும் உள்ள, மிகவும் பழமையான மொழிகளை கண்டறிந்து, 'மெமரி ரிஜிஸ்டர்' என்ற பட்டியலை, யுனெஸ்கோ அமைப்பு உருவாக்கியது. அதில் இடம்பெற்ற, முதல் மற்றும் ஒரே இந்திய மொழி, தமிழ் தான். அத்தகைய பெருமை வாய்ந்த தமிழ் மொழியில், திருக்குறளை எழுதி, உலகத்திற்கு தந்த மகான், திருவள்ளுவரது பிறந்த நாளை, தேசிய அளவில் கொண்டாடுவதற்கு, அனைவரும் ஆதரவு தர வேண்டும். இந்தியிலும், தடுமாற்ற தமிழிலும், மாறி மாறி உணர்ச்சி பொங்க, தருண்விஜய் பேசி முடித்ததும், சபையில் பலத்த கரகோஷங்கள் கிளம்பின. அந்த நேரத்தில், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி சபையில் இருந்தார். "தருண் விஜயின் கோரிக்கைக்கு, இத்தனை பெரிய வரவேற்பு உள்ளது. எனவே, அவரது கோரிக்கையை ஏற்று, திருவள்ளுவரின் பிறந்த நாளை, மத்திய அரசே கொண்டாடும். அடுத்த ஆண்டு முதல், தேசிய அளவில், கொண்டாடுவதற்கு உண்டான, அனைத்து ஏற்பாடுகளும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் மேற்கொள்ளப்படும்,” என்றார்.

4 comments:

  1. Very very important news thanks and share all people

    ReplyDelete
  2. நன்றி ஐயா... ஆங்கிலத்தில் சரளமாக கருத்து பதியும் நான் தமிழை தேடி தேடியே பதிகிறேன்.

    ReplyDelete
  3. நன்றி ஐயா!
    கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி எங்கள் தமிழ்க்குடி!

    ReplyDelete
  4. நன்றி! நன்றி! நன்றி! நன்றி!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி