ஆறு மாதமாக சம்பளம் இல்லை: விரக்தியில் கவுரவ விரிவுரையாளர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 9, 2014

ஆறு மாதமாக சம்பளம் இல்லை: விரக்தியில் கவுரவ விரிவுரையாளர்கள்


கடந்த ஆறு மாதங்களாக, அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத தால் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

1996 முதல்...:

தமிழகம் முழுவதும், 70 அரசு கலை கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் ஏற்படும் விரிவுரையாளர் காலியிடங்கள், கவுரவ விரிவுரையாளர்களால் நிரப்பப்படுகின்றன. 1996 முதல் இவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். ஒரு மணி நேரம் பாடம் நடத்தினால் ரூபாய் 50 என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ரூபாய் 100, ரூபாய் 150 என உயர்த்தப்பட்டது. 2010ல் அவர்களுக்கு தொகுப்பூதியமாக ரூபாய் 10 ஆயிரம்நிர்ணயிக்கப்பட்டது.ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டின் போதும், தொகுப்பூதியத்துக்கான நிதி ஒதுக்கப்பட்டு ஜூலையிலிருந்து சம்பளம் வழங்கப்படும்.ஆண்டுக்கு 10 மாதம் மட்டுமே இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த 10 மாதம் முடிந்த உடன், இவர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுகின்றனர். அவ்வாறு நியமிக்கப்படும்போது, முன்னுரிமை அடிப்படையில்இவர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது.மாணவர்கள் அதிகம் உள்ள கல்லூரிகளில், இரண்டாவது 'ஷிப்ட்' செயல்படுகிறது. இதில் துறை தலைவர் மட்டுமே, அரசால் நியமிக்கப்படுகிறார்.

மற்றபடி பெரும்பாலும் கவுரவவிரிவுரை யாளர்களே பணியில் இருக்கின்றனர்.இதில் புதிதாக விரிவுரையாளர்கள் நியமிக்க வாய்ப்பு இல்லாததால், இவர்களுக்கான சம்பளம் ஆண்டு இறுதியில் அரசால் வழக்கமாக ஒதுக்கப்பட்டு வருகிறது.ஆனால் ரெகுலர் 'ஷிப்ட்'டில் விரிவுரையாளர்கள் காலியாக உள்ள இடங்களில், கவுரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலுவையில்உள்ள 1,068 விரிவுரையாளர்கள் நியமனம் இந்த ஆண்டு ஏற்படுத்தப்படும் என அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.தாவரவியல், விலங்கியல் என, ஒரு சில துறைகளுக்கு மட்டுமே, நேர்முக தேர்வு நடத்திரேங்கிங் பட்டியல் வெளியிடப்பட்டது. மற்ற துறைகளுக்கு ரேங்கிங் பட்டியல் வெளியிடப்படவில்லை. இதனால் யாருக்கும் பணி நியமனமும் வழங்கவில்லை.நிதி ஒதுக்கீடின்றி தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை கல்லூரிகளில் ரெகுலர் 'ஷிப்ட்'ல் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த ஆறு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.கவுரவ விரிவுரையாளர் ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு அரசு கலை கல்லூரியிலும், காலியாகும் பணியிடங்கள், கவுரவ விரிவுரையாளர்களை கொண்டே நிரப்பப்படுகிறது. புதிதாக ஆரம்பித்த கல்லூரிகளில் பெரும்பாலும் கவுரவ விரிவுரையாளர்களே பணிபுரிகின்றனர். 15 ஆண்டாக தொடர்ந்து பணியில் இருப்பவரும் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், ஜூலையில் முதல் சம்பளம் வழங்கப்பட்டு விடும். இந்த ஆண்டு ஜெ., சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு சம்பவத்தால் அரசு நிர்வாகம் முடங்கி கண்டுகொள்ளாமல் விடப்பட்டது.

தீபாவளி அட்வான்ஸ்:

இதனால், உயர்கல்வி துறையில் கோப்பு நிலுவையில் உள்ளது என கூறுகின்றனர். ஆறு மாதமாக சம்பளம் இல்லாமல் பணியாற்றுவதால் வீட்டு செலவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.விரிவுரையாளர்களுக்கு சம்பளம் மட்டுமன்றி, தீபாவளி அட்வான்சும் வழங்கப்படுகிறது. ஆனால், எங்களுக்கு சம்பளமே வழங்கப்படவில்லை. அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி