Nov 12, 2014
Home
kalviseithi
ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற நேரில் வரத்தேவையில்லை
ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற நேரில் வரத்தேவையில்லை
மத்திய,
மாநில அரசுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு
கோடிக்கும் மேற்பட்டோர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். அவர்கள்,
தாங்கள் உயிருடன் இருப்பதை நிரூபிப்பதற்காக, ஆண்டுதோறும் நவம்பர் மாதம்,
அதிகாரிகள்
முன்பு நேரில் ஆஜராக வேண்டும்
அல்லது குறிப்பிட்ட அதிகாரிகள் கையெழுத்திட்ட உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி செய்தால்தான், அவர்களுக்கு
தொடர்ந்து ஓய்வூதியம் கிடைக்கும். இந்த நடைமுறை, ஓய்வூதியதாரர்களுக்கு
சிரமமானதாக இருந்து வருகிறது.
இந்நிலையில்,
அவர்களின் நலனுக்காக, ‘ஜீவன் பிரமான்’ என்ற
புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி
நேற்று தொடங்கி வைத்தார். இது,
‘ஆதார்’ அடிப்படையிலான டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் திட்டம் ஆகும்.
இதற்காக,
எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப
துறை, ஒரு சாப்ட்வேர் அப்ளிகேஷனை
உருவாக்கி உள்ளது. இதன்படி, ஓய்வூதியதாரர்
தனது கம்ப்யூட்டரிலோ அல்லது ஸ்மார்ட் போனிலோ
பயோமெட்ரிக் விவரங்களை படித்தறியக்கூடிய கருவியை பொருத்திக் கொள்ள
வேண்டும். அதைப் பயன்படுத்தி, தனது
‘ஆதார்’ எண், பயோமெட்ரிக் தகவல்கள்,
அப்போதைய நேரம், நாள் உள்ளிட்ட
முக்கிய விவரங்களை மத்திய விவரத்தொகுப்புக்கு (டேட்டா
பேஸ்) அனுப்பி வைக்க வேண்டும்.
அதன்மூலம், ஓய்வூதியத்தை விடுவிக்கும் அமைப்பு, டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழை பெற்றுக்கொள்ளும்.
Recommanded News
Related Post:
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
a welcome decision by government of india
ReplyDelete