அண்ணா பல்கலை. பகுதி நேர பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2014

அண்ணா பல்கலை. பகுதி நேர பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழகத் துறைகளான கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி. ஆகியவற்றால் வழங்கப்படும் இந்த படிப்புகளில் கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடத்தப்படும். மூன்றாண்டு டிப்ளமோ முடித்து, பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே இந்தப் படிப்புகளில் சேர முடியும்.

மூன்றரை ஆண்டுகள் கொண்ட இந்தப் படிப்புக்கான வகுப்புகள் தினமும் மாலை 6.15 மணி முதல் இரவு 9.15 மணி வரை நடத்தப்படும். படிப்பில் சேர விரும்புபவர்கள்

www.annauniv.eduptbe2014 என்ற இணைய தளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்து, நவம்பர் 22-ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை, உரிய கட்டணத்துக்கான வங்கி வரைவோலையுடன் இயக்குநர், மாணவர் சேர்க்கை மையம், அண்ணா பல்கலை, சென்னை- 25 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க நவம்பர் 28 கடைசித் தேதியாகும்.

கலந்தாய்வு அழைப்புக் கடிதம் நேரடியாக விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டும்.

கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி