ரயில்வே "குரூப் டி' பணியாளர் தேர்வு: தமிழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு - வைகோ கண்டனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2014

ரயில்வே "குரூப் டி' பணியாளர் தேர்வு: தமிழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு - வைகோ கண்டனம்

தெற்கு ரயில்வே "குரூப் டி' பணியாளர் தேர்வில், தமிழக இளைஞர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் "குரூப் டி' பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

இந்தத் தேர்வுக்காக 11 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் விண்ணப்பங்களை ரயில்வே வாரியம் நிராகரித்திருக்கிறது.

அரசு பணிகளுக்கு விண்ணப்பம் செய்யும்போது இணைக்கப்படும் சான்றிதழ் நகல்களுக்கு அரசு அதிகாரிகளின் சான்றொப்பம் பெற வேண்டும் என்ற விதி நீக்கப்பட்டு விட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால், ரயில்வே தேர்வு வாரியம் "குரூப் டி' பணியிடங்களுக்கான தேர்வு விண்ணப்பங்களில் இணைக்கப்பட்ட நகல் சான்றிதழ்களுக்கு அரசு அதிகாரிகளின் சான்றொப்பம் இல்லை என்று நிராகரித்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

எனவே, சான்றொப்பம் இல்லாமல் விண்ணப்பங்கள் அனுப்பியுள்ள தமிழக, தென் மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அனைவரின் விண்ணப்பங்களையும் ரயில்வே தேர்வு வாரியம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழக இளைஞர்களை "குரூப் டி' தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

1 comment:

  1. icm marriage senjavanga salem dt ,pls send me your phone number or mail , my mail id alaguamul@gmail.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி