மாநில மனித உரிமை ஆணையத் தலைவராக டி.மீனாகுமாரி நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 17, 2014

மாநில மனித உரிமை ஆணையத் தலைவராக டி.மீனாகுமாரி நியமனம்

மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி டி.மீனாகுமாரியை நியமித்து, தமிழக ஆளுநர் கே.ரோசய்யா உத்தரவிட்டார். இதுதொடர்பாக சனிக்கிழமை வெளியான தமிழக அரசிதழில் கூறியிருப்பது:

மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி டி.மீனாகுமாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் பதவி ஏற்கும் நாளில் இருந்து 5 ஆண்டுகளோ அல்லது அவரின் 70 வயது வரையோ பதவி வகிப்பார். இதில் எது முன்பு வருகிறதோ, அதுவே கணக்கில் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகாலயா உயர் நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் டி.மீனாகுமாரி. அதற்கு முன்பு, ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம், பாட்னா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் அவர் இருந்துள்ளார். தமிழக மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பதவி கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில், மனித உரிமை ஆணையத் தலைவரை நியமிக்கும்படி கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவுரைத்தது. அதன்படி தற்போது மீனாகுமாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

3 comments:

  1. Congrats to president of Human Rights

    ReplyDelete
  2. U r most welcome to the president of tamilnadu human rights commission

    ReplyDelete
  3. CONGRATS MAM ! WELCOMES TO THRC, WE HOPE SO MANY PROBLEMS TO BE SOLVED BY YOUR PROCESS. WARM WELCOMES TO YOU.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி