தபால்துறையை பல்வேறு சேவை வழங்கும் அமைப்பாக மாற்ற திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 17, 2014

தபால்துறையை பல்வேறு சேவை வழங்கும் அமைப்பாக மாற்ற திட்டம்


இந்திய தபால் துறையை பல்வேறு வகை சேவைகள் தரும் ஒரு அமைப்பாக மாற்ற மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது.நாடெங்கும் மூலை முடுக்கெங்கும் பரந்து விரிந்துள்ள தபால் அலுவலகங்கள் மூலம் புதிதாக

எது போன்ற சேவைகளைத் தர முடியும் என மத்திய அமைச்சகங்களுக்கு இடையில் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தபால்காரர் மூலம் பல்வேறு விதமான சேவைகளுக்கான கட்டண வசூலிப்பு சேவை, தகவல்களை பதிவு செய்வது என பல்வேறு வசதிகளை தபால் அலுவலகம் மூலம் தர அரசு பரிசீலிக்கிறது. ஆன்லைன் ஷாப்பிங் மேற்கொள்பவர்களுக்கு பொருட்களை வீடுகளுக்கு வினியோகிக்கும் பணியை மேற்கொள்ள தபால் துறை ஏற்றது என மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதற்கிடையில் தபால் அலுவலகங்களை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வது குறித்து பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ள சிறப்புக் குழு இந்தாண்டு இறுதியில் தனது பரிந்துரையை அளிக்க உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி