சமஸ்கிருத மொழிப்பாட விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 30, 2014

சமஸ்கிருத மொழிப்பாட விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு


அரசு செய்த தவறுக்கு மாணவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? எனவே நடப்பு கல்வியாண்டில் மூன்றாவது மொழிப் பாடமாக ஜெர்மன் மொழியே தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்6 முதல் 8 வரையிலான வகுப்புகளில், ஜெர்மானிய மொழிக்கு பதிலாக சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழிப் பாடமாக சேர்க்க மனிதவள அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நேற்று கூறியதாவது: முறையான ஒப்புதல் இல்லாமல் ஜெர்மானிய மொழியை, மூன்றாவது மொழிப் பாடமாக முந்தைய மத்திய அரசு சேர்த்து விட்டதாகவும், அதை தற்போது தொடர முடியாது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.அரசு செய்த தவறுக்கு மாணவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? எனவே நடப்பு கல்வியாண்டில் மூன்றாவது மொழிப் பாடமாக ஜெர்மன் மொழியே தொடர வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி