அடிப்படையே தெரியாத ஆசிரியை சஸ்பெண்ட் ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2014

அடிப்படையே தெரியாத ஆசிரியை சஸ்பெண்ட் !


கான்பூர்: உ.பி.,யில், 315ஐ, மூன்றால் வகுக்க தெரியாமல், திருதிருவென விழித்த பள்ளி ஆசிரியை, கல்வி துறை அதிகாரியால் அதிரடியாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
உ.பி., மாநிலம் கான்பூர் அருகே, ஹர்கா என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள தொடக்கப் பள்ளியில் ஆய்வு நடத்துவதற்காக, கல்வி துறை அதிகாரி ராஜேந்திர பிரசாத், சமீபத்தில் சென்றார்.

அவர் சென்றபோது, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பெரும்பாலான ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வெளியில், மொபைல் போனில் அரட்டை அடித்து கொண்டிருந்தனர்.பின், அங்குள்ள மூன்றாம் வகுப்புக்கு அந்த அதிகாரி சென்றார். மாணவிகள் சிலரை எழுப்பி, 315 என்பதை எண் வடிவில் எழுதும்படி கூறினார். அவர்களுக்கு எழுத தெரியவில்லை; சில மாணவர்கள் தவறாக எழுதினர். அதிர்ச்சி அடைந்த அதிகாரி, வகுப்பாசிரியை ருசி ஸ்ரீவத்சவாவிடம், 315 ஐ, மூன்றால் வகுத்து காட்டும்படி கூறினார்.ஆனால், அவர், அதை வகுக்க முடியாமல், திருதிருவென விழித்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் அதிகாரி ராஜேந்திர பிரசாத். இதையடுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியர், மூன்றாம் வகுப்பு ஆசிரியை ருசி, மம்தா, சபனா ஆகிய ஆசிரியைகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

4 comments:

  1. It is the national shame. How the students would come up in life? Not only student's life, it spoils nation's growth. So sad

    ReplyDelete
  2. avanga edum nervous la kooda apadi mulithu irukalam .inda seidhiyai kondu edhu solla mudiyadhu

    ReplyDelete
    Replies
    1. Nervous means that her quality is questionable.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி