ரூம் மேட் தேடி அலைகிறீர்களா?- உங்களுக்கு உதவ ஆண்டீராய்டு ஆப் வந்துவிட்டது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 18, 2014

ரூம் மேட் தேடி அலைகிறீர்களா?- உங்களுக்கு உதவ ஆண்டீராய்டு ஆப் வந்துவிட்டது


குடியிருக்க ஃபிளாட்டைத் தேடும்போது இளைஞர்கள், இளம் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல், நல்லதொரு ரூம் மேட்டை தேர்ந்தெடுப்பதுதான்.அப்படி ரூம் மேட் தேடி அலைபவர்களுக்கு உதவும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ஒரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்.

அதுதான், 'ஃபிளாட்சாட்'. (Flatchat)நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் 'ஃபிளாட்சாட்' என்ற இந்த புதிய ஆப்பை (App) டவுன்லோட் செய்து உங்களது ரூம் மேட்(Room Mate) எப்படி இருக்க வேண்டும் என்பதை பதிவு செய்யவேண்டியது மட்டுமே.தகவல்களை நீங்கள் பதிந்துவிட்டால் போதும், அதே விருப்பத்துடன் இருக்கும் நபர் உங்களிடம் சாட்(chat) செய்வார். இருவருக்கும் உடன்பாடிருந்தால் ரூம் மேட் ஆகலாம்.

அதுமட்டுமல்லாமல், இந்த அப்ளிகேஷனை உருவாக்கிய நிறுவனம், உங்களுக்கான ஒரு உதவியாளரையும் அளிக்கிறது. உங்களுக்கு ரூம் மேட்டைத் தேர்ந்தெடுப்பதில் சிரமம் இருந்தால், அவர் உதவியுடன் எளிதாக உங்களுக்கான ரூம் மேட்டை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.தற்போது இச்சேவை மும்பை, டெல்லி, பூனே, பெங்களூரு, கொல்கத்தா, ஜெய்ப்பூர் மற்றும்குர்கான் ஆகிய நகரங்களில் பயன்படுத்தப்படுகிறது.இந்த அப்ளிகேஷனை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி