துவக்கப்பள்ளி இல்லாத குடியிருப்புபட்டியல் சமர்ப்பிக்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2014

துவக்கப்பள்ளி இல்லாத குடியிருப்புபட்டியல் சமர்ப்பிக்க உத்தரவு


துவக்கப்பள்ளி வசதி இல்லாத குடியிருப்பு பகுதிகளை உள்ளடக்கிய பட்டியலை, உடனடியாக சமர்ப்பிக்க, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது.வரும் 2015-16 கல்வியாண்டில்,
புதிதாக தொடங்க வேண்டிய துவக்கப்பள்ளிகள் மற்றும் தரம் உயர்த்தப்பட வேண்டிய துவக்கப்பள்ளிகள் குறித்த பட்டியலை, உடனடியாக தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு சமர்ப்பிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: 2015-16 கல்வியாண்டில், துவக்கப்பள்ளிகள் இல்லாத குடியிருப்பு பகுதிகளில், பள்ளிகளை துவக்கும் பொருட்டு, கடந்த மாதம், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது.இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், வட்டார வள மையங்களில் பள்ளிகள் தேவைப்படும் குடியிருப்பு பகுதிகளின் பட்டியலை பெற்று, தனி நபரைக்கொண்டு, நேரடியாக தொடக்கக்கல்வி இயக்ககத்தில், வரும் 10ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். மேலும், நடுநிலைப்பள்ளிகளாக தரம்உயர்த்தப்பட வேண்டிய, துவக்கப்பள்ளிகளின் பட்டியலையும் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி