போக்குவரத்துக் கழகங்களில், காலி பணியிடங்களை நிரப்ப, நேரடியாக தேர்வு செய்யும் முறையை தவிர்க்க வேண்டும். தேர்வு நடத்தி, தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என, தொழிற்சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
கூட்டம் நிரம்பி வழிகிறது : தமிழகத்தில் உள்ள, எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்களில், ஓட்டு னர், நடத்துனர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் ஆகியவற்றில், 7,500 காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றில், ஓட்டுனர், நடத்துனர் பணிகளில், அதிகளவில் காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளில் சேர விரும்புவர்கள், போக்குவரத்துக் கழக அலுவலகங்களில், நவ., 20ம் தேதிக்குள்
விண்ணப்பங்களை பெற வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, அந்தந்த மண்டல அலுவலகங்களில், டிச., 8ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, அறிவித்து உள்ளனர். இதனால், போக்கு வரத்துக் கழக அலுவலகங்களில், விண்ணப்பதாரர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
விண்ணப்பிக்கும் முறை : வழக்கமாக, காலி பணியிடங்களை நிரப்ப, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து, பதிவு மூப்பு அடிப்படையில், தகுதியானவர் தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால், இந்த முறை நேரடியாக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு, தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்க, (சி.ஐ.டி.யூ.,) துணை பொதுச் செயலர், சேகர் கூறியதாவது: கோர்ட் உத்தரவை அடுத்து, நேரடியாக விண்ணப்பிக்கும் முறை கொண்டு வந்துள்ளதாக, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகின்றனர். தகுதியானவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நோக்கில், கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. அதற்கு, ரயில்வே, வங்கி உள்ளிட்ட பிற துறைகளில், தேர்வு மூலம் தகுதியான வரை தேர்ந்தெடுக்கும் முறையை, போக்கு வரத்துக் கழகங்களிலும் பின்பற்ற வேண்டும்.
ஊழலுக்கு வழி வகுக்கும் : இதற்காக, தனி தேர்வு குழுமம் உருவாக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களை தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும். ஓட்டுனர் என்றால், துறை தொடர்பான அறிவை பரிசோதிக்கும் தேர்வு; வாகனத்தை இயக்கிக் காட்டும் தேர்வு; இறுதியாக, நேர்காணல் என்ற முறையில் தேர்வு செய்ய வேண்டும். அதை தவிர்த்து, நேரடி யாக நேர்காணலில் மட்டுமே தேர்வு செய்வதில், தகுதியானவர் களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். மேலும், இந்த முறை ஊழலுக்கு வழி வகுக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.
இதுகுறித்து, போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: எந்தவொரு துறையி லும், காலி பணியிடங்கள் நிரப்பப்படும் போது, அந்த விவரம் தகுதியானர்கள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும்.
தகுதியானவர்கள் தேர்வு : அந்த நோக்கில், நடப்பு ஆண்டு ஜூலையில், உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவின் படி தான், நேரடியாக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
மேலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களில் இருந்தும், தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் வகையில், தகுதியானவர்களின் பட்டியலை கேட்டுள்ளோம்.
நேரடியாக விண்ணப்பித்தவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் என, இருதரப்பினரையும் நேர்காணலுக்கு அழைத்து, தகுதியானவர்களை தேர்ந்தெடுப்போம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி