காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு, பலர் கட்சியில் இருந்து பிரிந்து செல்கின்றனர் என்று காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
ஜிகே.வாசனின் தீவிர ஆதரவாளரான கடலூரை சேர்ந்த மணிரத்தினம்,தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.
இளங்கோவனை நேற்று சந்தித்து மீண்டும் தன்னை காங் கிரசில் இணைத்துக்கொண் டார்.சிதம்பரத்தை சேர்ந்த வர் மணிரத்தினம். ஜிகே.வாசனின் தீவிர ஆதரவாளரான இவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டி யிட சீட் கேட்டார்.ஆனால் சிதம்பரம் ஆதரவாளரான வள்ளல்பெருமாளுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட் டது. இதையடுத்து, மணிரத்தினம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாமகவில் இணைந்தார். பாமக சார்பில் மணிரத்தினம் மனைவிக்கு சீட் வழங்கப்பட்டது. ஆனால் அவர் தோல் வியடைந் தார்.இந்நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலை வர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை மணிரத்தினம் நேற்று சந்தித்து, மீண்டும் காங்கிரசில்இணைந்தார். அவருக்கு பொன்னாடை போர்த்தி இளங்கோவன் வரவேற்றார். பின்னர் நிரு பர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு காங்கிரசில் இ ருந்த மணிரத்தினம் கட்சியுடன் ஏற்பட்ட சிறு பிரச்னை காரணமாக கட்சியில் இருந்து விலகி சென்றார்.
இந்தியா முழுவதும் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையிலும் அவர் காங்கிரசில் இணைந் திருப்பதால் அவரை பாராட்ட மிகவும் கடமைப்பட்டுள் ளேன். வெற்றிபெறும் கால த்தில்மட் டும் காங்கிரசில் இருந்து பதவி, சுகங்களை அனுபவித்துவிட்டு சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் சிலர் பிரிந்து சென்றுள்ள னர். சோனியா, ராகுலுக்கு வெற்றி, தோல்வி முக்கிய மல்ல. நாடு தான் முக்கியம். சிலர் கட்சியை விட்டு வெளியேறியது, பலர் இங்கே வருவ தற்கு வழிவகுத்துவிட்டது. இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி