வேலூர் மாவட்டத்தில் கொணவட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த மாதம் 15ம் தேதி பயிற்சிக்காக வந்த ஆசிரியர் பயிற்சி பள்ளிமாணவர், மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பெரும்பாலான மாவட்டத்தில் இதுபோன்று சம்பவங்கள் அதிகரித்து வருகி ன்றது. இந்த தவறுகளை தடுப்பதற்கும், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருதியும் அரசுபள்ளிகளில் கண்காணிப்பு கேமரா விரைவில் பொருத்தப்பட உள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் கடுமையாக அடிப்பதன் காரணமாக பள்ளியில் கேமராக் களை பொருத்த அரசு உத்தரவிட்டிருந்தது. எனவே பெரும்பாலான தனியார் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு பள்ளிகளில் கேமராக்கள் பொருத் தப்படவில்லை. மேலும் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போன்ற பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இவற்றைதடுப்பதற்காக அரசு பள்ளிகளில் நூலகங்கள், ஆய்வுக்கூடங்கள், தலைமை ஆசிரியர் அறை மற்றும் ஆசிரியர்கள் ஓய்வுஅறை உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராவை பொருத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இந்தகண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை கண்காணிப்பதற்கு ஒருவரைநியமனம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி