சாந்தி நிலவ வேண்டும்: இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 16, 2014

சாந்தி நிலவ வேண்டும்: இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம்

அகிம்சை மற்றும் சகிப்புத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஐ.நா., சபையால் ஆண்டுதோறும் நவ.,16ம் தேதி சர்வதேச சகிப்புத்தன்மை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
சமூகத்தில் சகிப்புத்தன்மை இல்லாததால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அனைவரும் அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை மற்றும் ஒருவருக்கு ஒருவர் வன்முறையின்றி விட்டுக்கொடுத்து நட்புடன் வாழ்ந்தால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம்.ஒவ்வொருவரும் மற்றவரின் அடிப்படை உரிமை, கருத்துகள், சுதந்திரம், கலாசாரம், மத நம்பிக்கை போன்றவற்றை அங்கீகரிக்கவும், மதிக்கவும் வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. சகிப்புத்தன்மை இல்லாததால், உலகில் தவறான நீதி, அடக்குமுறை, இனவெறி, பாகுபாடு போன்றவை றஏற்படுகிறது. சகிப்புத்தன்மை ஏற்பட தனி மனிதன் மட்டுமின்றி, ஒவ்வொரு அரசின் அரசியல் தீர்வும் முக்கியம்.


என்ன தேவை:

சமூகத்தில் சகிப்புத்தன்மையை ஒரு நாள் இரவில் உருவாக்கிவிட முடியாது. சகிப்புத்தன்மை பற்றி இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது அவசியம். இதற்கு குழந்தைகளின் பாடப்புத்தகங்களில் சகிப்புத்தன்மை பற்றிய சிறப்பு பாடங்களை அனைத்து நாடுகளும் கற்றுத்தர வேண்டும். அப்போது தான் வருங்கால சந்ததியினர் வன்முறை, இனவெறி, பயங்கரவாதம், அடிமைத்தனம், மனித உரிமை மீறல் போன்ற பிரச்னைகள் இல்லாத வாழ்க்கை வாழ முடியும். நாடுகளுக்கு இடையே விளையாட்டுப்போட்டிகள் நடத்துவது கூட சகிப்புத்தன்மை வளர்வதற்கு உதவுகிறது.

விருது:

யுனெஸ்கோ சார்பில் உலகில் சகிப்புத்தன்மை மேம்படவும், அகிம்சை தழைத்தோங்கவும் பாடுபடுபவர்களுக்கு (நிறுவனம், அமைப்பு, தனிநபர்) 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை "யுனெஸ்கோ - மதன்ஜீத் சிங் விருது' வழங்கப்படுகிறது. இவ்விருது 1996ம் ஆண்டு, உலகுக்கு அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியடிகளின் 125வது பிறந்த நாளின் போது உருவாக்கப்பட்டது. இவ்விருதுக்கு நிதியளித்தவர் மதன்ஜீத்சிங். இவர் இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் சமூக சேவகர். உலகின் அமைதி மற்றும் சகிப்புத்தன்மை நிலவுவதற்கு பாடுபட்டார். 2000 முதல் ஐ.நா., வின் நல்லெண்ண தூதராக இருந்த இவர் 2013 ஜன., 6ல் மறைந்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி