அரசு கல்லூரிகளில் வேலைவாய்ப்பு மையம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 16, 2014

அரசு கல்லூரிகளில் வேலைவாய்ப்பு மையம்

பெங்களூரு: தனியார் கல்லூரிகள், அரசு தொழில் சார்ந்த கல்லூரிகளில் மட்டுமே இருந்து வந்த, வேலைவாய்ப்பு மையங்கள், இனி, கர்நாடகாவின், அனைத்து அரசு கல்லூரிகளிலும் துவங்கப்பட உள்ளது.
அரசு கல்லூரிகளில் பட்டப்படிப்பு படித்து வரும் மாணவர்களை, தனியார் பள்ளி மாணவர்களுக்கு சமமாக கொண்டு செல்லும் நோக்கில், வேலை வாய்ப்பு மையங்களை துவங்கும்படி, கல்வித்துறை, மாநிலத்தின் அனைத்து அரசு கல்லூரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

நேர்முக தேர்வு:

இதனால், இங்கு படிக்கும் மாணவர்களும் கூட, தனியார் கல்லூரி மாணவர்களை போன்று, 'கேம்பஸ்' நேர்முகத்தேர்வில் பங்கேற்று, வேலை வாய்ப்பு பெறலாம். போட்டி நிறைந்த, இந்த உலகில், மாணவர்களுக்கு மதிப்பெண் மட்டும் முக்கியமல்ல, திறமையை வளர்த்து கொள்ளவும், உலக அறிவை ஏற்படுத்தி கொண்டு, சர்வதேச கம்பெனிகளில், நேர்முக தேர்வை எதிர் கொள்ள, தேவையான தன்னம்பிக்கையை பெறவும், வேலை வாய்ப்பு மையங்கள் உதவியாக இருக்கும். குறிப்பாக, பட்டப்படிப்பில், இறுதியாண்டில் இருக்கும் மாணவர்களை கவனத்தில் வைத்து, இம்மையங்களை துவங்க, கல்வித்துறை முன் வந்துள்ளது.

மையத்தின் பணி:

இறுதியாண்டு மாணவர்களுக்கு, வேலை வாய்ப்பு பெற, தேவையான திறன், சொந்த விவரம் கொண்ட விண்ணப்ப கடிதம் தயாரிக்கும் முறையை கற்று தருவது, ஐ.ஏ.எஸ்., -- கே.ஏ.எஸ்., வங்கி, எல்.ஐ.சி., ரயில்வே தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சியாளர் மூலம் பயிற்சி அளிப்பது, கல்வி ஆண்டில், கருத்தரங்கு, கலந்துரையாடல் மற்றும் உத்யோக மேளாவை ஏற்பாடு செய்வது, இம்மையத்தின் முக்கிய பணியாகும். சுய ஆர்வத்துடன், சில கல்லூரிகள், ஏற்கனவே, வேலை வாய்ப்பு மையத்தை திறந்துள்ளன. இங்கு, பல, கம்பெனிகளில் பணியாற்றி வரும் பழைய மாணவர்களை கல்லூரிக்கு வரவழைத்து, அவர்களுடன் கலந்துரையாடி, அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி